குழந்தைகளின் அசாத்திய திறமைகளை கௌரவிக்கும் பைஜுஸ் ’யங் ஜீனியஸ்’ நிகழ்ச்சி

குழந்தைகளின் அசாத்திய திறமைகளை கௌரவிக்கும் பைஜுஸ் ’யங் ஜீனியஸ்’ நிகழ்ச்சி

யங் ஜீனியஸ்

இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளின் திறமைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக இந்த ’யங் ஜீனியஸ்’ நிகழ்ச்சி இருக்கப்போகிறது.

 • Share this:
  நியூஸ் 18 குழுமம் மற்றும் பைஜுஸ் இணைந்து குழந்தைகளின் திறமைகளை கௌரவிக்கும் வகையில் ’யங் ஜீனியஸ்’ என்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. அதோடு நிகழ்ச்சியின் தொடக்கப் பாடலாக சலிம் சுலைமான் இசையில் எழுச்சி மிக்க பாடலையும் உருவாக்கியுள்ளது. இது குழந்தைகளை ஊக்குவிக்கும் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளின் திறமைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக இந்த ’யங் ஜீனியஸ்’ நிகழ்ச்சி இருக்கப்போகிறது. வரும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பை இன்று நியூஸ் 18 குழுமம் மற்றும் பைஜூஸ் இணைந்து வெளியிட்டுள்ளது. இந்த யங் ஜீனியஸ் நிகழ்ச்சியானது குழந்தைகள் தினத்தன்று நுழைவுக்கான விளம்பரப் பிரச்சாரத்துடன் தொடங்கப்பட்டது. இது வார நிகழ்ச்சியாக 11 பகுதிகளாக நடக்கவுள்ளது. இறுதி நிகழ்ச்சியில் பல கட்ட தேர்வுகளுக்குப் பின் சிறப்பான ’யங் ஜீனியஸ்’ யார் என்ற அறிவிப்பை வெளியிடும்.

  ஒவ்வொரு வாரமும் குழந்தைகளின் அற்புத திறமைகளை வெளிப்படுத்தும். அது கல்வி , கலை, தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு இப்படி எதுவாகவும் இருக்கும். இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியின் சிறந்த நடுவர்களாக நிதி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் கான், பத்மபூஷன் டாக்டர் மல்லிகா சாராபாய், முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் மற்றும் CNBC-TV18 நிர்வாக ஆசிரியர் ஷெரீன் பான் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.  அதோடு இந்நிகழ்ச்சியின் எழுச்சி மிக்க பாடலை சலிம் சுலைமான் இசையமைத்தது மட்டுமன்றி அவரே பாடியுள்ளார். குழந்தைகளுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் உண்டாக்கும் இந்த பாடல் வரிகளை எழுதியவர் ஷ்ரதா பண்டித்.அதோடு இன்று அந்தப் பாடலானது டிஜிடல் மற்றும் ரேடியோவில் வெளியிடப்பட்டு ஒளிபரப்பப்பட்டுள்ளது.
  Published by:Sivaranjani E
  First published: