தமிழகத்தில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களை கவுரவிக்கும் வகையில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் நடந்த கற்றல் விருதுகள் நிகழ்ச்சிகளில் 22 பிரிவுகளில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், கவிஞர் வைரமுத்து, கலைப்புலி எஸ். தானு, இயக்குனர் சீனு ராமசாமி, சாகித்திய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் இமையம் போன்ற அரசியல், திரைப் பிரபலங்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரி நிர்வாகங்களுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.
விருது வென்ற கல்லூரிகள்:
சிறந்த புதுமைக்கான கற்றல் விருது கோவையில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
#கற்றல்விருதுகள் புதுமைக்கான விருது ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை பெற்றுளது. இதனை எழுத்தாளர் இமையம் வழங்கினார்.#KatralAwards2021 | https://t.co/qfb8QrJgKL pic.twitter.com/OWDuV9VGFs
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 15, 2021
சிறந்த ஆய்வுக்கான கற்றல் விருது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலிஜிக்கு வழங்கப்பட்டது.
இதேபோல் அனைவருக்குமான கல்வி என்ற பிரிவுக்கான கற்றல் விருது சென்னை குரோம்பேட்டையில் உள்ள SDNP வைஷ்ணவ் கல்லூரிக்கு அளிக்கப்பட்டது.
#கற்றல்விருதுகள் அனைவருக்குமான கல்வி என்ற பிரிவுக்கான விருதை எஸ்.டி.என்.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரி பெற்றுள்ளது. இதை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.#KatralAwards2021 | https://t.co/qfb8QrJgKL pic.twitter.com/GmVoLXwACU
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 15, 2021
சென்னை லயோலா கல்லூரி, சிறப்பான வேலைவாய்ப்புக்கான பிரிவின் கற்றல் விருதை வென்றுள்ளது.
கோவையிலுள்ள ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிறந்த உள்கட்டமைப்பு பிரிவுக்கான கற்றல் விருதை தட்டிச்சென்றது.
சிறந்த தொழிற்கல்விக்கான கற்றல் விருது சென்னையில் உள்ள சிப்பெட்-ஐபிடி நிறுவனத்துக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சிறந்த ஆன்லைன் கல்விக்கான கற்றல் விருதை சென்னையில் உள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி பெண்கள் கல்லூரி வென்றுள்ளது
#கற்றல்விருதுகள் ஆன்லைன் கல்வியில் சிறந்த கல்லூரிக்கான விருதை ஸ்ரீ கன்னிகா பரவேமஸ்வரி பெண்கள் கல்லூரி, சென்னை பெற்றுள்ளது. இதனை அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதனிடம் இருந்து தாளாளர் கோகுலம் ரமேஷ் பெற்றுக்கொண்டார்.#KatralAwards2021 | https://t.co/qfb8QrJgKL pic.twitter.com/W6UwzlRP7T
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 15, 2021
பெண்கள் முன்னேற்றம் என்ற சிறப்புப்பிரிவுக்கான கற்றல் விருதை சென்னையிலுல்ள ராணி மேரிக் கல்லூரி தட்டிச்சென்றது.
சிறந்த பல்கலைக்கழகம் என்ற பிரிவில் பொறியியலுக்கான விருதை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைகழக வளாகத்தின் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் வென்றுள்ளது.
சிறந்த பல்கலைக்கழகம் என்ற பிரிவில் கலை, அறிவியலுக்கான கற்றல் விருது கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
#கற்றல்விருதுகள் சிறந்த கலை அறிவியல் பல்கலைக்கழகத்திற்கான விருது கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது.#KatralAwards2021 | https://t.co/qfb8QrJgKL pic.twitter.com/nFpvJicqAP
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 15, 2021
சிறப்பு அங்கீகாரம் என்ற பிரிவுக்கான நியூஸ் 18 கற்றல் விருதை பிரெசிடன்சி கல்லூரி வென்றுள்ளது.
#கற்றல்விருதுகள் சிறப்பு அங்கீகாரம் என்ற பிரிவுக்கான விருதை பிரசிடென்சி கல்லூரி, சென்னை பெற்றுள்ளது. இதனை கவிப்பேரரசு வைரமுத்து வழங்கினார்.#KatralAwards2021 | https://t.co/qfb8QrJgKL pic.twitter.com/bQI6qTnWhV
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 15, 2021
கொங்கு பகுதியில் சிறந்த கலை, அறிவியல் கல்லூரிக்கான கற்றல் விருது, கோவையிலுள்ள ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விமான போக்குவரத்துக்கான நியூஸ் 18 தமிழ்நாடு கற்றல் விருதை சென்னையிலுள்ள ரெமோ சர்வதேச கல்லூரி வென்றுள்ளது.
சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கற்றல் விருது மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் பிரிவில் சிறந்த வேலைவாய்ப்பு வசதிக்கான கற்றல் விருது திண்டுக்கல்லில் உள்ள PsNAபொறியியல் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான கற்றல் விருது சேலத்தில் உள்ள விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொங்கு பகுதியிலுள்ள சிறந்த பொறியியல் கல்லூரிக்கான கற்றல் விருது கோவையிலுள்ள பார்க் குரூப் இன்ஸ்டிடியூசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
#கற்றல்விருதுகள் சிறந்த பொறியியல் கல்லூரிக்கான (கொங்கு மண்டலம் ) விருது பார்க் குரூப் இன்ஸ்டிடியூசனுக்கு, கோயம்புத்தூர் வழங்கப்பட்டடது.#KatralAwards2021 | https://t.co/qfb8QrJgKL pic.twitter.com/AbzBodgKmg
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 15, 2021
இதேபோல் வளரும் வேளாண் கல்லூரி என்ற பிரிவுக்கான கற்றல் விருதை புதுக்கோட்டையில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி வென்றுள்ளது.
சிறப்பான ஆன்லைன் கல்வி வழங்குதல் என்ற பிரிவுக்கான கற்றல் விருது சென்னையிலுள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
வளரும் மருத்துவக்கல்லூரி என்ற பிரிவுக்கான சிறப்பு கற்றல் விருது சென்னையிலுள்ள லலிதாம்பிகை மருத்துவக்கல்லூரிக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக்கல்லூரியில் சிறந்த சேவை பிரிவுக்கான கற்றல் விருது ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள சிறந்த உயர்கல்வி பிரிவுக்கான கற்றல் விருதை மீனாட்சி அகாடமி ஆஃப் ஹையர் எஜூகேசன் அன்ட் ரிசர்ச் நிறுவனம் வென்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Katral Awards 2021, News18, News18 Network, News18 Tamil Nadu