• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • நியூஸ்18 செய்தி எதிரொலி: 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணம் அரசே ஏற்பு

நியூஸ்18 செய்தி எதிரொலி: 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணம் அரசே ஏற்பு

Youtube Video

அரசுப் பள்ளியில் படித்து 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  • Share this:
    அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. கடந்த 15-ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில், கலந்தாய்வுக்கான தொகையைக்கூட செலுத்த முடியாத சூழலில் உள்ளதாக அரசுப் பள்ளி மாணவர்கள் கவலை தெரிவித்தனர். கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக நமது நியூஸ் 18 தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது.

    இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7. 5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் பயன்பெறும் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கினார்.

    அப்போது பேசிய முதலமைச்சர், போட்டிகள் நிறைந்த உலகில் முன்னனி அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்கிற ஏக்கம் மறைந்து மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் காணப்போகும் நாளாக மாறியிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்பு ஏழரை விழுக்காடு ஒதுக்கீட்டில் பயில இருக்கும் ஏழை எளிய மாணவர்கள், கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் நிலையை தொலைக்காட்சி மூலம் அறிந்ததாக தெரிவித்தார். எனவே, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணம், விடுதி கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்கும் என்று அறிவித்தார்.

    கல்லூரிக்கு சேரும் மாணவர்களுக்கு இலக்கு படிப்பு என்பதாகவே இருக்க வேண்டும் என்றும் வேலைக்கு செல்வதோடு மட்டுமல்லாமல் வேலையை மற்றவர்களுக்கு கொடுப்பவர்களாக மாணவர்கள் மாற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    கல்வி கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் அறிவித்திருப்பதற்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

    இதன்மூலம் நடப்பாண்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்பில் சேரும் 11047 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

    ஏழரை சதவீதம் இடஒதுக்கீட்டில் தொழிற்படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து , ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட, தொகையை உடனே திரும்ப அளிக்க உத்தரவிட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கூறியுள்ளது.

    பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், பட்டியலின மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டிருந்த நிலையில் அவை திரும்ப அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: