Home /News /education /

நியூஸ்18 வகுப்பறை: மக்களாட்சிக்கும், குடியரசுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

நியூஸ்18 வகுப்பறை: மக்களாட்சிக்கும், குடியரசுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

காட்சி படம்

காட்சி படம்

அரசியலமையப்புக்கு புறம்பானதாக இருக்கும் சட்டங்களையும், நிர்வாக உத்தரவுகளையும்  செல்லாது  எனச் சொல்லும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு வழங்கப்படுகிறது.

  இந்திய அரசியலமைப்பு முகப்புரையில், "இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச் சமுதாயமும், சமயச்சார்பின்மையும், மக்களாட்சிமுறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவுகிறோம் (SOVEREIGN. SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC)" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மக்களாட்சி முறை, குடியரசு முறை இரண்டும் வெவ்வேறு  அரசு முறைகள் அல்லது வடிவங்கள் பற்றி பேசுகிறது. எனவே, மக்களாட்சிக்கும், குடியரசுக்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே காண்போம்.

  குடியரசு: 

  குடியரசு அமைப்பில் மக்கள் இறையாண்மைக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது. இதைத்தான் ஆப்ரகாம் லிங்கன், "மக்களால், மக்களுக்காக ஏற்படும் மக்கள் அரசாங்கம்" என்று குறிப்பிடுகிறார். வரம்புக்குட்பட்ட ஆட்சியை மக்கள் ஆதரிக்கின்றனர். அதிகாரப் பிரிவினை (Separation of Powers) இதன் முக்கிய அம்சமாக உள்ளது. சட்டம், நிர்வாகம், நீதி என மூன்று வகை அரசாங்க வேலைகளும் தனித்தனி பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். அதிகாரப் பிரிவு வெறும் நிர்வாக வசதிக்காக மட்டுமல்லாமல், ஒரு கோட்பாடாகவே கருதப்படுகிறது. குடியரசு ஆட்சி முறையில் நீதிப்புனராய்வு (Judicial Review) முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன்கீழ், அரசியலமைப்புக்கு புறம்பானதாக இருக்கும் சட்டங்களையும், நிர்வாக உத்தரவுகளையும் செல்லாது எனச் சொல்லும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு வழங்கப்படுகிறது.

  மக்கள் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், அரசாங்கத்தை அதன் எல்லைக்குள் சுருக்கவும் நீதிப்புனராய்வு  உதவுகிறது.

  குடியரசுக் கோட்பாடு ஆதரவாளரும், அமெரிக்க மேதையான ஹாமில்டன்,  இவ்வாறாக கூறுகிறார், " Give all power to the many, they will oppress the few. Give all power to the few, they will oppress the many. Both, therefore, ought to have the power, that each may defend itself against the other"?

  எல்லா அதிகாரங்களையும் பலரிடம் கொடுத்தால் அவர்கள் சிலரையும், எல்லா அதிகாரங்களையும் சிலரிடம் கொடுத்தால் அவர்கள் பலரையும் நசுக்குவார்கள். ஆகையால், ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமளவு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும்" என்று தெரிவிப்பார்.

  மக்களாட்சிமுறை:

  மக்களால் நடத்தபபடும் என்று அரசு நேரடியாக பொருள் கொள்ளப்பட்டாலும், மக்கள் அனைவரின் சார்பில் சிலர் நடத்தும் அரசு மக்களாட்சிமுறை என்றழைக்கப்படுகிறது.

  எனவே, ஆளுபவருக்கும் ஆளப்படுவருக்கும் இடையே நடக்கும் தொடர்ச்சியான பேசிச்சுவார்த்தைகள் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல் கட்சிகள் செயல்படுதல், வாக்குப் பதிவு  நடத்துதல் போன்ற செயல்முறைகள்  மூலம் இந்த பேச்சுவாரத்தை நடத்தப்படுகிறது.

  மக்களாட்சியில், அரசங்கள் எண்ணற்ற பிரச்சனைகளை தீர்க்க நேரிடும். சமநலச் சமுதாயம், சமயச்சார்பின்மை ஆகியவற்றை ஏற்படுத்த அரசாங்கம் தனது வரம்பை மீறிக் கொள்ளலாம். அமெரிக்க போன்ற அதிகாரப் பிரிவினை, சமநிலைத் தலையீடுகள்(CHecks and Balanaces) இந்தியாவில் கிடையாது. இன்னும், அழுத்தமாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில், நாடாளுமன்றத்தின் ( சட்டத்துறை) உறுப்பினராக இருந்தால் மட்டுமே பிரதமர் (நிர்வாகத் துறை) பதவிக்கு தகுதி பெற முடியும்.

  விளங்கிக் கொள்ளல்: உதாரணமாக, சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் தடையற்ற சுதந்திரத்தை குடியரசு விரும்புகிறது. இந்த கோட்பாட்டின் கீழ், இடஒதுக்கீடு செயல்முறை அரசாங்கத்தின்  தலையீடாக பார்க்கப்படும். சுதந்தத்திரத்தையும், சமத்துவத்தையும் ஒன்றொருக்கொன்று பகைமையானவை என்று  பொருள் கொள்ளப்படும். 

  ஆனால், மக்களாட்சி முறையில் ஆக்க நல அரசு(welfare state) என்பது பிரிக்க முடியாததாகும். சமத்துவம் தான் உண்மையான சுதந்திரத்தை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாட்டை அரசால் எடுக்க முடியும். அரசாங்கம் தன்னிச்ச்சையான வாதத்தை தொடங்க முடியும்.          
  Published by:Salanraj R
  First published:

  Tags: Democracy

  அடுத்த செய்தி