பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணையை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்படும் விதிமுறைகளை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டு பேசிய அமைச்சர் பொன்முடி, நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றார். சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தில் மட்டும் 631 பொறியியல் இடங்கள் காலியாக இருந்ததாக குறிப்பிட்ட அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டு பின்னர் நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்று விடுவதால் காலியாவதாக கூறினார். இதனை தவிர்க்க, நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகே பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்தார்.
இந்நிலையில், ஆன்லைன் வழியில் 4 கட்டங்களாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு இனி 7 நாட்களுக்கு பதில் 2 வாரகாலத்திற்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 20ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 15 நாட்களிலிருந்து 7 நாட்களாக குறைத்து, புதிய விதிமுறையை தமிழக உயர்கல்வித்துறை நடப்பாண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னனி கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்த பின்னர் மருத்துவம் உள்ளிட்ட வேறு படிப்புகளுக்கு செல்வதால் ஏற்படும் காலியிடங்களை தவிர்க்க இந்த நடை முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்தவகையில் இனி பொறியியல் படிப்பிற்கான இடங்களை தேர்ந்தெடுத்து 7 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த தவறினால் அந்த இடம் காலியிடமாக கருதப்பட்டு தரவரிசையில் அடுத்த இடத்தில் உள்ள மாணவர் முன் நகர்த்தப்பட்டு காலியாகும் இடம் அந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
Must Read : கோயில் உண்டியல் மீதே அறநிலையத்துறைக்கு அக்கறை உள்ளது - அண்ணாமலை பேச்சு
கடந்த ஆண்டு அண்ணா பல்கலையில் உள்ள 600 இடங்களில் 419 பேர் மட்டுமே சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.