• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மாநில கல்வி அமைச்சர்களுக்கு அழைப்பு!

புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மாநில கல்வி அமைச்சர்களுக்கு அழைப்பு!

மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய அரசிடம் கஸ்தூரி ரங்கன் குழு தாக்கல் செய்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கை குறித்து விவாதிக்க மாநில கல்வி அமைச்சர்களுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also see… இனி 24 மணி நேரமும் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் செயல்படலாம்

Also see…




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see…




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: