மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு நவம்பர் 11-ம் தேதி வெளியாக வாய்ப்பு!

New Education Policy | ”குறிப்பாக 1 லட்சத்து 10 ஆயிரம் கருத்துகள் கிராம கல்வி சபைகளிடம் இருந்து வந்துள்ளது”

news18
Updated: September 9, 2019, 10:22 AM IST
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு நவம்பர் 11-ம் தேதி வெளியாக வாய்ப்பு!
கோப்பு படம்
news18
Updated: September 9, 2019, 10:22 AM IST
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு, தேசிய கல்வி தினமாக நவம்பர் 11-ம் தேதி வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017-ம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்தி கட்டாயம் என்ற மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால்  உடனடியாக அந்த பகுதி நீக்கம் செய்யப்பட்டு புதிய வரைவு மீண்டும் வெளியிடப்பட்டது.


வரைவு கல்விக் கொள்கை மீது ஆலோசனைகளை வழங்க ஆகஸ்ட் 15-ம் தேதி வரை பொதுமக்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து 2 லட்சத்திற்கு மேற்பட்ட கருத்துக்கள் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

குறிப்பாக 1 லட்சத்து 10 ஆயிரம் கருத்துகள் கிராம கல்வி சபைகளிடம் இருந்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த கருத்துக்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 15 குழுக்கள், வரைவு அறிக்கையில் என்னென்ன மாற்றங்களை மேற்கொள்வது என்ற அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.

இறுதி செய்யப்பட்ட தேசிய கல்விக் கொள்கை குறித்து வரும் 25-ம் தேதி நடைபெறும்  மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட  உள்ளது.  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன் உடன் வரும் நவம்பர் 11-ம் தேதி தேசிய கல்வி தினத்தன்று புதிய கல்விக் கொள்கையை அறிவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.

Loading...

First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...