மருத்துவப்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வின் முதல்சுற்று முடிவுகள் சனிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளியாகின்றன. இதனை ஒட்டி தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குநரகம், ஏற்கெனவே வெளியிட்ட மருத்துவக் கலந்தாய்வு அட்டவணையில் சில மாற்றங்களை செய்துள்ளது.
புதிய அட்டவணைப்படி இன்று காலை 10 மணி முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்யலாம். பிப்ரவரி 2ம் தேதி காலை 8 மணி முதல் 5-ம் தேதி மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
ஏற்கெனவே வெளியிட்ட அட்டவணையில், 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கப்படும் என கூறப்பட்டது. தற்போது, பிப்ரவரி 7 முதல் 10ம் தேதி வரை சான்றிதழ்கள் சரி பார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடங்கள் ஒதுக்கீடு தொடர்பான முடிவுகள் பிப்ரவரி 12ம் தேதிக்கு பதில் 15ம் தேதிக்கு வெளியிடப்படும். மருத்துவ இடம் ஒதுக்கீட்டிற்கான ஆணையை மாணவர்கள் 16ம் தேதி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
ஏற்கெனவே பிப்ரவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை அசல் சான்றிதழுடன் சென்று கல்லூரியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பிப்ரவரி 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை கல்லூரிகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு விவரங்கள், சுகாதாரத்துறை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
tnhealth.tn.gov.in/, tnmedicalselection.net ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளதன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.