முகப்பு /செய்தி /கல்வி / வரும் கல்வியாண்டு தமிழக பாடப்புத்தகத்தில் புதிய மாற்றமா? லியோனி விளக்கம்

வரும் கல்வியாண்டு தமிழக பாடப்புத்தகத்தில் புதிய மாற்றமா? லியோனி விளக்கம்

மாதிரி படம்

மாதிரி படம்

Text BooK | வரும் 2022-2023-ம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுவிட்டன

  • Last Updated :

பாடப்புத்தகத்தில் மத்திய அரசு பெயர், ஆளுநர் அதிகாரம் உள்ளிட்ட அம்சங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதா என்பது குறித்து க தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் லியோனி விளக்கமளித்துள்ளார்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகிறது. அதன் படி தமிழக அரசு வெளியிடும் ஆணைகள், அறிவிப்புகள் என அனைத்திலும் ஒன்றிய அரசு என்று குறிப்பிடப்பட்டு வெளியாகின்றன. இதன் அடிப்படையில் பள்ளி பாடப்புத்தகத்திலும் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக ஒன்றிய அரசு என்று திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

இவைத் தவிர மொழி வாழ்த்து பாடல், செம்மொழி தமிழ் மாநாட்டுக்காக மறைந்த முதலமைச்சர் கருணாநிதி எழுதிய பாடல் மற்றும் ஆளுநர் அதிகாரங்கள் பற்றிய குறிப்பில் திருத்தம் ஆகியவை புதிதாக பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

Also Read : நீட் தேர்வுக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு - தேர்வை ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை

இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் லியோனி வெளியிட்டுள்ள தகவலில், பள்ளிப் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதில் ஒன்றிய அரசு என்று மாற்றுதல், கருணாநிதியின் செம்மொழி பாடலை புகுத்துதல், ஆளுநரின் அதிகாரங்கள் பற்றிய குறிப்பில் திருத்தல் செய்தல் போன்ற மாற்றங்கள் எதுவும் வரும் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களில் கிடையாது. வரும் 2022-2023-ம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுவிட்டன

top videos

    2023-2024-ம் கல்வியாண்டுக்கான புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனத்தின் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் திருத்தம் இருப்பின் அது, 2023-2024-ம் கல்வியாண்டில் அமலாக வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Book for students, Education