Home /News /education /

ஆங்கில மொழி பேசும் 5% பேர் மட்டுமே வாய்ப்புகளைப் பெறுகின்றனர் - அமித் ஷா

ஆங்கில மொழி பேசும் 5% பேர் மட்டுமே வாய்ப்புகளைப் பெறுகின்றனர் - அமித் ஷா

மத்திய அமைச்சர் அமித் ஷா

மத்திய அமைச்சர் அமித் ஷா

எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கல்விக் கொள்கையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார் - அமித் ஷா

    ஆங்கில மொழிகளில் மட்டுமே  மருத்துவம்/தொழில்நுட்பம்/சட்டக் கல்வி பயிற்றுவிக்கப்படுவதால்  5% இந்தியர்கள் மட்டும் அறிவுத்தளத்தில் செயல்படுகின்றனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

    தேசிய கல்விக் கொள்கையின் இரண்டாம் ஆண்டு தினத்தை ஒட்டி பல்கலைக் கழக மானியக் குழு டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, " இன்றைய இளைஞர்களின் லட்சியங்களை பிரதிபலிக்கும் விதமாக தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரத்திற்குப் பின்  கொண்டுவரப்பட்ட கல்விக் கொள்கைகளில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே கல்விக் கொள்கை இதுவாகும் என்று தெரிவித்தார்.

    21ம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையான இது, இந்தியனாக இருப்பதில் உள்ள பெருமிதத்தை மாணவர்களுக்கு வழங்குகிறது. அதே சமயம், உலகளாவிய நல்வாழ்வை யோசிக்கும்/பேணிக் காக்கும் உலகக் குடிமகனையும் இது  உருவாக்குகிறது என்று தெரிவித்தார்.

    உள்ளூர் மற்றும் பிராந்திய மொழிகளின் பங்கு குறித்து பேசிய அவர், " ஆங்கில மொழிகளில் மட்டுமே  மருத்துவம்/தொழில்நுட்பம்/சட்டக் கல்வி பயிற்றுவிக்கப் படுவதால்  5% இந்தியர்கள் மட்டும்  அறிவுத்தளத்தில் செயல்படுகின்றனர். இன்றைய சூழல், 95% இளைஞர்களின் திறன்கள் அங்கீகரிக்கப் படவில்லை.  நாட்டின் 100% குடிமகன்களும் பல்வேறு இலக்குகள் கொண்ட வாய்ப்புகளைப் பெறும் வகையில் நமது பாடத்திட்டங்களும், கற்பிக்கும் முறையும்  அமைய வேண்டும் " என்று தெரிவித்தார்.

    இதையும் வாசிக்க: இல்லம் தேடி கல்வித் திட்டம்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

    2025-ல் உயர்கல்வியில் பதிவு சேர்க்கை விகிதத்தை 50% ஆக அதிகரிக்க உள்ளூர் மொழிகள் உதவும் என்றும் தெரிவித்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Amit Shah, Education

    அடுத்த செய்தி