• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • ஓரே நேரத்தில் பலரும் விண்ணப்பித்ததால் முடங்கியது நீட் இணையதளம்!

ஓரே நேரத்தில் பலரும் விண்ணப்பித்ததால் முடங்கியது நீட் இணையதளம்!

நீட் தேர்வு

நீட் தேர்வு

, முதல் நாளானே இன்று ஏராளமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்ப முயன்றனர். இதனால் நீட் இணையதளம் சிறிது நேரம் முடங்கியது. பின்னர் மீண்டும் சீர் ஆனது

  • Share this:
நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில், பலரும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றதால் நீட் இணையதளம் சிறிது நேரம் முடங்கியது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.  ஆண்டு தோறும் மே மாதத்தில் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனினும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி நீதி தேர்வு நடத்தப்பட்டது. நடப்பு ஆண்டிலும் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். தேர்வுக்கு இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: தமிழக அரசின் நீட் ஆய்வுக்குழு செல்லும்: பாஜக மனு தள்ளுபடி!


neet.nta.nic.in தளத்துக்கு சென்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில், முதல் நாளானே இன்று ஏராளமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்ப முயன்றனர். இதனால் நீட் இணையதளம் சிறிது நேரம் முடங்கியது. பின்னர் மீண்டும் சீர் ஆனது.  இதை தொடர்ந்து மாணவர்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 6ம் தேதி இரவு 11.50 மணிவரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  தேர்வுக்கு கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 7ம் தேதி கடைசி நாள் ஆகும். ஆகஸ்ட் 8 முதல் 12ம் தேதிவரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: