நாளை
நீட் (NEET) தகுதித் தேர்வு நடைபெறுவதை யொட்டி தேர்வு கூட நுழைவுச் சீட்டு தொடர்பான சில முக்கிய அறிவுரைகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. இந்த அறிவுரைகள் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதால், பின்பற்ற தவறும் பட்சத்தில் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும் என்பதாலும் தேர்வர்கள் இதனை உறுதியாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நீட் தேர்வு நுழைவுச் சீட்டை என்டிஏ இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து இரண்டு நகலை (Xerox) எடுத்துக் கொள்ள வேண்டும்.
நுழைவுச் சீட்டு நான்கு பக்கங்களைக் கொண்டதாய் இருக்கும்.
முதல் பக்கத்தில் தேர்வு மையங்கள் தொடர்பான விவரங்களும், கொரோனா நோய்த் தோற்று தொடர்பான விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல் கேட்கப்பட்டிருக்கும். அண்மையில் எடுத்த பாஸ்போர்ட் அளவு நிழற்படம் (இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றினது போல), இடது கட்டை விரல் பதிவு (Left Hand Thumb Impression), பெற்றோர் கையொப்பம் ஆகியவற்றை நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிரப்ப வேண்டும். தேர்வு மையத்துக்கு செல்வதற்கு முன்பாகவே முதற்பக்கம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்பதால், பெற்றோரின் கையொப்பத்தை முன்கூட்டியே வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தேர்வரின் கையொப்பம் (Candidate Signature) தேர்வு மையத்தில் உள்ள கண்காளிப்பாளர் முன்னிலையில் மட்டுமே நிரப்ப வேண்டும்.
இரண்டாவது பக்க மாதிரி படிவத்தில், தேர்வரின் அஞ்சல் அட்டை அளவு புகைப்படம் (PostCard Size Photograph) ஓட்டப்படவேண்டும். புகைப்படம் ஓட்டப்படாத தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வரின் கையொப்பம் (Candidate Signature) தேர்வு மையத்தில் உள்ள கண்காளிப்பாளர் முன்னிலையில் மட்டுமே நிரப்ப வேண்டும்.
அஞ்சல் அட்டை அளவு (4" * 6 ") வெண்மை நிறப் பின்புலத்தில் எடுக்கப்பட்ட தெளிவான வண்ணப் புகைப்படமாக இருக்க வேண்டும்.
இரண்டாவது பக்க மாதிரி படிவத்தில் ஒட்டப்பட்ட நிழற்படம், முதற்பக்கத்தில் ஓட்டப்பட்ட நிழற்படத்துடன் பொருந்த வேண்டும். இந்த இரண்டும் , தேர்வு மையத்தில் உள்ள கண்காளிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: நாளை நீட் தேர்வு.. எதற்கெல்லாம் அனுமதி? எவற்றுக்கெல்லாம் தடை? முழு தகவல்
மூன்றாவது பக்கத்தில், தேர்வில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய அறிவுரைகள் இடம்பெற்றிருக்கும்.
நான்காவது பக்கத்தில், கொரோனா பெருந்தொற்று தொடர்பாக தேர்வு மையத்தினுள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கும்.
தேர்வர்கள், ஒன்றுக்கு இரண்டுமுறை நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளையும், வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதர பொது விவரங்கள்:
நுழைவுச் சீட்டுடன், அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அசல் ஏதேனும் ஒன்றை எடுத்து வர வேண்டும். PAN அட்டை/ஓட்டுனர் உரிமம்/வாக்காளர் அட்டை/பாஸ்போர்ட்/ ஆதார் அட்டை (புகைபடத்துடன்) / இ- ஆதார், குடும்ப அட்டை/கல்வி வாரியத்தால் வழங்கப்பட்ட 12ம் வகுப்பு தேர்வு பதிவெண் ஆவணம்/ புகைப்படத்துடன் கூட ஆதார் பதிவு சீட்டு எண் (Aadhar Enrollement with Photo).
இதையும் வாசிக்க: நீட் தேர்வர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் 'ஒயோ' நிறுவனம்
மாற்றுத்திறனாளிக்கான பிரிவில் தளர்வு கோருபவர்கள் அதற்கென சான்று வைத்திருத்தல் வேண்டும். தேர்வு மையத்தினுள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்கு வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
Advisory to the Candidates NEET(UG)-2022 17 July 2022 (Sunday)உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.