Home /News /education /

NEET UG 2022 : நீட் தேர்விற்கான ஹால்டிக்கெட் வெளியீடு - டவுன்லோட் செய்வது எப்படி?

NEET UG 2022 : நீட் தேர்விற்கான ஹால்டிக்கெட் வெளியீடு - டவுன்லோட் செய்வது எப்படி?

நீட் தேர்வு

நீட் தேர்வு

NEET UG 2022 Admit Card: நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்டை eet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியானது. நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இன்று காலை 11.30 மணிமுதல் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு, வரும் 17-ம் தேதி மதியம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 18 ,72 ,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தேர்வர்கள் தங்களுடைய தேர்வுக்கான  நுழைவுச்சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    eet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 497 மையங்களில் இந்தத் தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Step 1 : முதலில் நீட் NTA அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in பக்கத்திற்குச் செல்லவும்.

    Step 2 : முகப்புப் பக்கத்தில், 'Download Neet UG 2022 Admit Card 2022' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

    Step 3 : இப்போது ஒரு புதிய வலைப்பக்கம் திறக்கும்.

    Step 4 : விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும்.

    Step 5 : உங்கள் நீட் யுஜி 2022 அட்மிட் கார்டு திரையில் காட்டப்படும்.

    Step 6 : அட்மிட் கார்டை டவுன்லோட் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Neet, Neet Exam

    அடுத்த செய்தி