முகப்பு /செய்தி /கல்வி / நீட் தேர்வுக்குத் தயாராவது எப்படி? தேர்வுப் பாடத் திட்டங்கள் என்ன? முழு விபரம் இதோ

நீட் தேர்வுக்குத் தயாராவது எப்படி? தேர்வுப் பாடத் திட்டங்கள் என்ன? முழு விபரம் இதோ

நீட்

நீட்

இயற்பியல் பாடத்தில் இருந்து 45 கேள்விகளும், வேதியியல் பாடத்தில் இருந்து 45 கேள்விகளும், உயிரியல் பாடத்தில் இருந்து 90 கேள்விகளும் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

N2023-ம் ஆண்டு மருத்துவ இளநிலை பட்டப் படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது. எனவே, நீட் தேர்வுமுறை குறித்தும், தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்தும் இங்கு பார்ப்போம்.

தேர்வு முறை: 

3 மணிநேரம் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். இயற்பியல் பாடத்தில் இருந்து 45 கேள்விகளும், வேதியியல் பாடத்தில் இருந்து 45 கேள்விகளும், உயிரியல் பாடத்தில் இருந்து 90 கேள்விகளும் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள். மொத்த மதிப்பெண்கள் 720 ஆகும். கேள்விகள் பல்குறித்தேர்வு (Multiple choice Questions) வினாக்களாக இருக்கும். அதாவது, ஒவ்வொரு வினாவிற்கு சரியான விடை உட்பட நான்கு விடைகள் இடம்பெறும்.

பாடம்எண்ணிக்கைமதிப்பெண்கள்
இயற்பியல்45180
வேதியியல்45180
உயிரியல் (தாவரவியல்/ விலங்கியில்)90360
மொத்தம்180720

இயற்பியல் (Physics) , வேதியியல் (Chemistry), உயிரியியல் (Biology)  தாவரவியில் (Botany) மற்றும் விலங்கியியல் (Zoology) ஆகிய பாடங்களில் கவனம் செலுத்துவது முக்கியமானாதாகும்.  

முன்னதாக, நீட் தேர்வெழுதும் தமிழ்நாடு மாணவர்கள் பயன்பெரும் வகையில், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரோஹிணி, NCERTயின் அறிவியல் புத்தகத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து, பயிற்சி கையேடாக வெளியிட்டார்.

இயற்பியல் பாடத்திட்ட கையெடு

வேதியியல் (Chemistry)

வ.எண்தொகுதி -1தொகுதி -2
1வேதியியலின் அடிப்படைக் கொள்கைகள் திடநிலைமை 
2அணு அமைப்பு கரைசல்கள் 
3தனிமங்களை வகைப்படுத்துதல் (ம) ஆவர்த்தன பண்புகள் மின் வேதியியல் 
4வேதிப் பிணைப்பு (ம) மூலக்கூறு அமைப்பு வேதி வினை வேகவியல் 
5பொருட்களின் நிலைமைகள் : வாயு (ம) நீர்மம் புறப்பரப்பு வேதியியல் 
6வெப்ப இயக்கவியல் தனிமங்களை பிரித்தெடுக்கும் முறைகள் மற்றும் தத்துவங்கள் 
7வேதிச் சமநிலை P – தொகுதி தனிமங்கள் 
8ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள் d மற்றும்  f  தொகுதி தனிமங்கள் 
9ஹைட்ரஜன் அணைவுச் சேர்மங்கள் 
10S – தொகுதி தனிமங்கள்  ஹாலோ ஆல்கேன்கள் மற்றம் ஹாலோ அரீன்கள் 
11P – தொகுதி தனிமங்கள் ஆல்கஹால், பீனால், ஈதர்கள் 
12கரிம வேதியியல் : அடிப்படைத் தத்துவங்கள் ஆல்டிஹைடு, கீட்டோன்கள், கார்பாக்சிலிக் அமிலங்கள் 
13ஹைட்ரோகார்பன்கள் கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 
14சுற்றுச்சூழல் வேதியியல் உயிர்வேதி மூலக்கூறுகள் 
15பாலிமர்கள் (பல படிகள்) 
16நடைமுறை வேதியியல்  

உயிரியியல்: 

உயிரியல் (Biology)

வ.எண்தாவரவியல்வ.எண்விலங்கியல்
அலகு – 1பல்லுயிர்த்தன்மைஅலகு -5மனித உடற்செயலியல்
1.1உயிரியல் வகைப்பாடு 5.1செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் 
1.2தாவர வகைப்பாடு 5.2சுவாசம் மற்றும் வாயுப்பரிமாற்றம் 
1.3விலங்கு வகைப்பாடு 5.3உடல் திரவம் மற்றும் இரத்த ஓட்டமண்டலம் 
1.4மண்புழு மற்றும் தவளை 5.4கழிவு நீக்கமும் ஊடுகலப்பு ஒழுங்குப்பாடும் 
அலகு -2 உயிரினங்களின் அமைப்பு நிலை5.5இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் 
 2.1 தாவர புற அமைப்பியல்பிரிவு-1         பிரிவு-2 5.6நரம்பு கட்டுப்பாடும் ஒருங்கிணைவும் 
 2.2 தாவர உள்ளமைப்பியல் 5.7வேதி ஒருங்கிணைவு 
2.3விலங்கின அமைப்புநிலை அலகு-6இனப்பெருக்கம்
அலகு – 3செல் அமைப்பு மற்றும் பணிகள்6.1உயிரினங்களில் இனப்பெருக்கம் 
3.1செல் உயிரியல் 6.2ஆஞ்ஜியோஸ்பெர்ம்களில் பால் இனப்பெருக்கம் 
3.2செல் சுழற்சி மற்றும் செல் பகுப்பு 6.3மனித இனப்பெருக்க மண்டலம் 
3.3உயிரிய மூலக்கூறுகள் 6.4மனித இனப்பெருக்க நலம் 
அலகு-4தாவர செயலியல்அலகு-7மரபியல் மற்றும் பரிணாமம்
4.1தாவரங்களில் நீர் கடத்துதல் 7.1மரபியல் 
4.2கனிம ஊட்டம் 7.2மூலக்கூறு அடிப்படையிலான பாரம்பரியம் 
4.3ஒளிச்சேர்க்கை 7.3பரிணாமம் 
4.4தாவரங்களில் சுவாசித்தல் அலகு-8மனித நலனில் உயிரியல்
4.5தாவர வளர்ச்சி மற்றும் ஹார்மோன்கள் 8.1மனித உடல் நலம் மற்றும் நோய்கள் 
8.2உணவு உற்பத்தி மேம்பாட்டு வழிமுறைகள் 
அலகு-9உயிர் தொழில் நுட்பவியல்
9.1உயிர் தொழில் நுட்பவியல்- அடிப்படை கொள்கை மற்றும் பயண்பாடுகள் 
அலகு-10சூழ்நிலையியல்
10.1உயிரினங்களும் – சுற்றுச் சூழலும் 
10.2சூழ்நிலை மண்டலம் 
10.3உயிரிய பல்வகைமை 
10.4சுற்றுச்சூழல் பிரச்சனைகள் 

தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.மேலும், நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடா, உருது, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்படும். விண்ணப்பிக்கும் போதே, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

First published:

Tags: Neet, Neet Exam