NEET EXAM UPDATES: 2022 ஆண்டுக்கான நீட் தேர்வு விண்ணப்ப செயல்முறை பற்றி அறிந்து கொள்ள மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான நீட் தேர்வு விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்க இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. ஆனால், தேசிய தேர்வு முகமை இதுதொடர்பாக எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
இதற்கிடையே, 2022 நீட் தேர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என
Careers360 தளத்திடம் பேசிய தேர்வு தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தி, ஆங்கிலம் தவிர 11 பிராந்திய மொழிகளில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடக் கேள்வித்தாள் தயாரித்து நீட் (பட்டப்படிப்பு) தேர்வு நடத்தப்படுகிறது.
இயற்பியியல், வேதியியல் மற்றும் உயிரியியல் ஆகிய பாடங்களில் இருந்து மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.
தேர்வு முறை:
பாடம் |
கேள்விகள் |
மொத்த மதிப்பெண்கள் |
தாவரவியல் |
பகுதி 1 : 35 கேள்விகள்
பகுதி 2 : 15 கேள்விகள் (ஏதேனும் 10 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும் ) |
பகுதி I மதிப்பெண் : 140
பகுதி ii மதிப்பெண் : 40
மொத்தம் : 180 |
விலங்கியியல் |
பகுதி 1 : 35 கேள்விகள்
பகுதி 2 : 15 கேள்விகள் (ஏதேனும் 10 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும் ) |
பகுதி 1 : 140
பகுதி 2: 40
மொத்தம் : 180 |
|
பகுதி 1 : 35 கேள்விகள்
பகுதி 2 : 15 கேள்விகள் (ஏதேனும் 10 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும் ) |
பகுதி 1 : 140
பகுதி 2: 40
மொத்தம் : 180 |
Zoology |
பகுதி 1 : 35 கேள்விகள்
பகுதி 2 : 15 கேள்விகள் (ஏதேனும் 10 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும் ) |
பகுதி 1 : 140
பகுதி 2: 40
மொத்தம் : 180 |
Total |
மொத்த கேள்விகள் : 180 |
மொத்த மதிப்பெண்கள் : 720 |
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், nta.ac.in மற்றும் neet.nta.nic.in ஆகிய இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.