கேரளாவில், நீட் தேர்வெழுத சென்ற பெண் தேர்வரை சோதனை என்ற பெயரில் தேர்வு மையத்தினுள் அதிகாரிகள் மோசமாக நடத்தியுள்ளனர்.
முன்னதாக, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 543 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டும், முறைகேடுகளை தடுக்கும் பொருட்டும், மிகக் கடுமையான நெறிமுறைகளை தேர்வு முகமை பின்பற்றி வருகிறது.
தேர்வர்கள் தேர்வு மையத்தினுள் நுழையும் முன்பு உயர் உணர்திறன் கொண்ட உலோக உணர்வி பயன்படுத்தி விரிவான கட்டாய சோதனைக்குட்படுத்தப்பட்டார்கள். அதே போன்று, மூடப்பட்ட அறையில் பெண் அலுவலர்களைக் கொண்டு பெண் தேர்வர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டார்கள்.
மேலும், பெண் தேர்வர்களை சோதனைகள் மேற்கொள்வதில் ஏற்படும் உணர்ச்சி சிக்கலை அறிந்து, விரிவான அறிவுரைகள் தேர்வு மையத்தில் சோதனையில் ஈடுபடும் பெண் அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், கேரளாவில் கொல்லம் மாவட்டம், மார்தோமா உயர்கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுத சென்ற பெண் தேர்வர் ஒருவரை பெண் அலுவலர்கள் மிக மோசமாக நடத்தியுள்ளனர்.
இதையும் வாசிக்க: கடந்த ஆண்டை விட நீட் தேர்வு சிரமமாக இருந்தது - மாணவர்கள் கருத்து
தேர்வுக்கு முன்பாக தேர்வரின் மேல் உள்ளாடையை கழட்ட நிரபந்தித்துள்ளனர். கட்டாய சோதனை என்ற பெயரில் பாதிக்கப்பட்டவரின் நேர்மையையை, கண்ணியத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளனர். தேர்வை எழுதுவதற்கு முன்பாகவே உள ரீதியான, உணர்வு ரீதியான பிரச்னை கொடுக்கப்பட்டதாகவும், மன அதிர்வுகளை உணர்ந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் வாசிக்க: NEET Answer Keys : நீட் தேர்வின் உத்தேச விடைகள் குறித்த அப்டேட்
இருப்பினும், இந்த குற்றச்சாட்டை கல்லூரி நிர்வாகம் ஏற்க மருத்துளளது. கட்டாய சோதனையில் தங்கள் கல்லூரி நிர்வாகம் ஈடுபடவில்லை என்றும், வெளி நிறுவனங்கள் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. இது, பாலியல் ரீதியான பாகுபாட்டின் தீவிர வடிவம் என்றும், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
முன்னதாக, நீட் தேர்வு தொடர்பான தேர்வு அறிவிப்பில் உடை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதில், முழுக்கை ஆடைகளுக்கு முற்றிலும் அனுமதியில்லை. உலோக உணர்வி சோதனைக்கு இடையூறு ஏற்படாத வகையில் வெளிர்நிற அரைக்கை ஆடைகளை அணியலாம். செருப்புகள், குறைந்த குதிகால் கொண்ட செருப்புகள் அனுமதிக்கப்படும். ஷூக்கள் அணிய அனுமதியில்லை என்றும் தெரிவித்திருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.