கடத்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டிற்கான நீட் தேர்வு தாள் மிகக் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 543 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிடித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 95% விண்ணப்பித்தர்கள் தேர்வில் பங்கேற்றனர். தேர்வை மேற்பார்வையிட நாடு முழுவதும் 3911 கண்காணிப்பாளர்கள், 7877 துணை கண்காணிப்பாளர்கள், உள்ளூர் மட்டத்தில் 484 நகர ஒருங்கிணைப்பாளர்கள்,
1,56,504 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையும் வாசிக்க: IBPS Admit Card Released: ஐபிபிஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியானது
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு நீட் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கேள்விகள் பெரும்பாலும் என்சிஇஆர்டி பாடப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, பாடப் பொருள்களை தெளிவாக புரிந்து கொண்டு, முழுமையான தெளிவிருந்தால் மட்டுமே விலங்கியல் பாடத்தில் திருப்தியான மதிப்பெண்கள் பெற முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர் .
அதே போன்று, இயற்பியல் பாடத்தில் பல கேள்விகள் கடினத்தன்மையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. பிரச்சனைத் தீர்க்கும் ஆற்றல் (Numerical Problems) தொடர்பான கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை. அதே போன்று, கோட்பாடு மற்றும் பொருட்கள் தொடர்பான ஆழமான அறிவை பரிசோதிக்கும் விதமாக வேதியியல் கேள்விகள் இருந்ததாக கூறப்படுகுறிது.
கேள்விகள் பெரும்பாலும் என்சிஇஆர்டி அடிப்படையில் இருந்ததால், சிறப்பு பயிற்சி வகுப்புகளிலும் , சிபிஎஸ்இ வாரியப் பள்ளிகளிலும் படித்த மாணவர்களின் செயல்திறன் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.