Registration for NEET(UG)-2022: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு விண்ணப்ப செயமுறை இன்று நள்ளிரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது. எனவே, கடைசி நேரம் வரை தாமதிக்காமல், மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
முன்னதாக, வெளியிடப்பட்ட அறிவிப்பில் 2022 நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த காலக்கெடு மே-15 வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், ராணுவ செவிலியர் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவிகள் பயன்பெறும் வகையில், இந்த காலக்கெடுவை மே 20ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டது.
வயது வரம்பு: விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்ச வயது வரம்பு (Upper Age Limit) நீக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் வயது தடையாக இருக்கப்போவதில்லை. இதன்காரணமாக, நீட் நுழைவுத் தேர்வு எழுதவிருக்கும் இளம் மாணவர்கள் கூடுதல் சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.
neet.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 07-05-2022.
பொதுப் பிரிவினர் - ரூ. 1600 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்/ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - கிரீமிலேயர் அல்லாதோர் - ரூ - 1500 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்
பட்டியல் கண்ட சாதிகள், பட்டியல் கண்ட பழங்குடிகள்/ மாற்றுத் திறனாளிகள்/ மூன்றாம் பாலினத்தவர் - ரூ. 900 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்
வெளிநாடுகளில் உள்ள விண்ணப்பத்தார்கள் - ரூ. 8500
எனவே, இதுவரை விண்ணப்பிக்காத அனைத்து விண்ணப்பதாரர்களும் ,உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
யார் விண்ணப்பிக்கலாம்:
இந்தியர்கள்,
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs)
இந்தியாவின் வெளிநாடு வாழ் குடிமக்கள் (OCIs)
இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள்(PIOs),
வெளிநாட்டு குடிமக்கள் (Foreign Nationals)
திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை.. கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
நீட் நுழைவுத் தேர்வு மாணவர்கள் சேர்க்கை:
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வின் மூலம், கீழ்காணும் வகைகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு (All India Quota Seats)
மத்திய தொகுப்பு இடங்கள் (Central Pool Quota)
மாநில தொகுப்பு இடங்கள் (State Government Quota Seats)
தனியார் கல்லூரிகளில் உள்ள மாநில/நிர்வாக/ வெளிநாட வாழ் இந்தியர்கள் தொகுப்பு இடங்கள் (State/Management/NRI Quota Seats in Private Medical Colleges)
பாடத் திட்டம்: இயற்பியியல், வேதியியல் மற்றும் உயிரியியல் ஆகிய பாடங்களில் இருந்து மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.
இந்தி, ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடக் கேள்வித்தாள் தயாரித்து நீட் (பட்டப்படிப்பு) தேர்வு நடத்தப்படுகிறது.
பாடம் |
கேள்விகள் |
மொத்த மதிப்பெண்கள் |
தாவரவியல் |
பகுதி 1 : 35 கேள்விகள்பகுதி 2 : 15 கேள்விகள் (ஏதேனும் 10 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும் ) |
பகுதி I மதிப்பெண் : 140பகுதி ii மதிப்பெண் : 40மொத்தம் : 180 |
விலங்கியியல் |
பகுதி 1 : 35 கேள்விகள்பகுதி 2 : 15 கேள்விகள் (ஏதேனும் 10 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும் ) |
பகுதி 1 : 140பகுதி 2: 40மொத்தம் : 180 |
|
பகுதி 1 : 35 கேள்விகள்பகுதி 2 : 15 கேள்விகள் (ஏதேனும் 10 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும் ) |
பகுதி 1 : 140பகுதி 2: 40மொத்தம் : 180 |
Zoology |
பகுதி 1 : 35 கேள்விகள்பகுதி 2 : 15 கேள்விகள் (ஏதேனும் 10 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும் ) |
பகுதி 1 : 140பகுதி 2: 40மொத்தம் : 180 |
Total |
மொத்த கேள்விகள் : 180 |
மொத்த மதிப்பெண்கள் : 720 |
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், nta.ac.in மற்றும் neet.nta.nic.in ஆகிய இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011- 40759000 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.