Home /News /education /

Neet exam: நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு எப்போது வெளியாகும்?

Neet exam: நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு எப்போது வெளியாகும்?

நீட் தேர்வு

நீட் தேர்வு

சமூக ஊடகங்களில் நீட் தேர்வு செப்டம்பர் 4ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டதாக  வெளியான தகவல் போலியானது என தேசிய தேர்வு முகமை தெளிவுபடுத்தியது.

    NEET(UG)-2022:  நடப்பு ஆண்டிற்கான இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜுலை 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்வி மாணவர்களிடம் காணப்படுகிறது.

    மேலும், ஜேஈஈ மெயின் தேர்வு, இளநிலை பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு(CUET-UG), தெலுங்கானா பொறியியல் சேர்க்கைக்கான  நுழைவுத் தேர்வு ஆகிய தேர்வுகளின் தேதிகள் நீட் தேர்வுக்கு அடுத்தடுத்து வருவதால் நீட் தேர்வுக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று நீட் விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

     



    முன்னதாக, சமூக ஊடகங்களில் நீட் தேர்வு செப்டம்பர் 4ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டதாக  வெளியான தகவல் போலியானது என தேசிய தேர்வு முகமை தெளிவுபடுத்தியது. நீட் தேர்வை ஒத்திவைக்கப்படுவது தொடர்பாக இதுநாள் வரை முடிவு எடுக்கப்படாததால், திட்டமிட்டப்படி ஜுலை 17ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது.

    அடுத்தடுத்த தேர்வுகளால் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள், அதற்கேற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொள்வது அவசியமானதாகிறது.

    இதையும் வாசிக்கஇல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ஆசிரியர் காலி பணியிடங்களில் முன்னுரிமை

    பொதுவாக, தேர்வு நடைபெறுவதற்கு 10 நாடளுக்கு முன்பாக அனுமதிச் சீட்டு வெளியிடப்படும். எனவே, ஜுலை முதல் வாரத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் அனுமதிச் சீட்டு வெளியிடப்படலாம். இது தொடர்பான தகவல் விண்ணப்பதாரர்களின் அலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் வாசிக்கயுஜிசி-என்இடி தேர்வுகளுக்கான தேதிகள் வெளியானது

    தேசிய தேர்வு முகமையின்  www.nta.ac.in, ntaneet.nic.in ல் வெளியாகும் வெளியாகும் தகவல்களை மட்டும் அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Neet Exam

    அடுத்த செய்தி