Home /News /education /

NEET Answer Keys : நீட் தேர்வின் உத்தேச விடைகள் குறித்த அப்டேட்

NEET Answer Keys : நீட் தேர்வின் உத்தேச விடைகள் குறித்த அப்டேட்

நீட் தேர்வு

நீட் தேர்வு

ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகள் சரியானவை எனத் தெரிய வரும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்வகை சரியான தேர்வுகளை குறித்தமைக்கு நான்கு (+04) மதிப்பெண்கள் வழங்கப்படும்.

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில், பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் உத்தேச விடைகளை வெளியிட்டு வருகின்றன. தேர்வர்கள் உத்தேச விடைகளை பெற வேண்டுமானால் தேசிய தேர்வு முகமை இணையதளத்தை அவ்வப்போது பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இயற்பியல் 45, வேதியியல் 45, உயிரியியல் 90 என நீட் வினாத்தாள் தொகுப்பு 180 கேள்விகளைக் கொண்டது. ஒவ்வொரு வினாவும் 4 மதிப்பெண்கள் உடையது. சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் அளிக்கப்படும், தவறான விடைக்கு மொத்த மதிப்பெண்களில் இருந்து ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.

    எனினும், விடைகுறிப்பின் மேல்முறையீடு செயல்முறை முடித்தபின், ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகள் சரியானவை எனத் தெரிய வரும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்வகை சரியான தேர்வுகளை குறித்தமைக்கு நான்கு (+04) மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான தேர்வுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் (-1), தேர்வு செய்யாத / முயற்சி செய்யப்படாத வினாக்களுக்கு எந்த மதிப்பெண்ணும் வழக்கப்படாது.

    ஒருவேளை, ஏதேனும் ஒரு வினா  விடுவிக்கப்பட்டாலோ/புறக்கணிக்கப்பட்டாலோ அனைத்து தேர்வர்களுக்கும் நான்கு (+4) மதிப்பெண்கள், தேர்வர் வினாவை முயற்சித்திருந்தாலும், முயற்சி செய்யாமல் விட்டிருந்தாலும் அவருக்கு வழங்கப்படும்.

    அதே போன்று, இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்கள் பெற்றால், முதலில்  உயிரியல், பின்பு வேதியியல் பாடத்தில் பெற்ற அதிக மதிப்பெண் விவரங்கள் பார்க்கப்படும். அதிலும் சமமாக இருந்தால், மொத்த தேர்வில் தவறான விடைகளை மற்றும் சரியான விடைகளை குறைவாக குறித்தவர்கள், பின்பு வயதில் முதியவர் என்ற முறை கையாளப்பட்டு மூப்பு நிலை நிர்ணயிக்கப்படும்.

    இதையும் வாசிக்க:   கடந்த ஆண்டை விட நீட் தேர்வு சிரமமாக இருந்தது - மாணவர்கள் கருத்து

    உத்தேச விடைகள்:  தற்காலிக உத்தேச விடைகளை தேசிய தேர்வு முகமை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்வர்கள் அவ்வப்போது, neet.nta.nic.in இணைய தளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  எதிர்ப்புகள் மற்றும் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் அதனை தெரியப்படுத்த தேர்வருக்கு வாய்ப்பளிக்கப்படும். 
    Published by:Salanraj R
    First published:

    Tags: Neet, Neet Exam

    அடுத்த செய்தி