உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான (DM/MCh/DNB (Super Speciality) நீட் நுழைவுத் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்," 01.11.2021 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான உத்தேச நாட்கள் (ஜூன் 17,18) தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது என்பதை விண்ணப்பதாரர்களுக்கு தெரியபடுத்த விரும்புகிறோம். நிலைமை ஆய்வு செய்யப்பட்டு, புதிய தேதிகள்பின்னர் அறிவிக்கப்படும்.
https://natboard.edu.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் தகவல்களை மட்டும் அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தாண்டும் பழைய பாடத்திட்டத்தின் படியே சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கு ஒன்றையம் உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.