NEET Result 2019: நீட் தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சி... தேசிய அளவில் தமிழக மாணவர் 5-ம் இடம்...!

NEET 2019 Result at ntaneet.nic.in: நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,97,042 பேர் அதாவது 56.50% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

NEET Result 2019: நீட் தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சி... தேசிய அளவில் தமிழக மாணவர் 5-ம் இடம்...!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: June 6, 2019, 8:56 AM IST
  • Share this:
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5 மற்றும் 20-ம் தேதிகளில் நடந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் எனும் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ம் தேதி நடந்தது.

கடந்த காலங்களில் சி.பி.எஸ்.இ அமைப்பானது நீட் தேர்வு நடத்திய நிலையில், இந்த ஆண்டு முதல் இதற்கென தேசிய தேர்வு முகமை உருவாக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.


எனினும், நீட் தேர்வு நடந்த அன்று கர்நாடகாவில் ரயில் தாமதம் காரணமாக சுமார் 600 மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. மேலும், ஒடிசா மாநிலத்தில் போனி புயல் காரணமாக நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கவில்லை.

மேற்கண்ட இரு காரணங்களால் 5-ம் தேதி எழுத முடியாதவர்களுக்கு 20-ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வு எழுதியதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.தேசிய தேர்வு முகமையின் இணையதளமான ntaneet.nic.in -ல் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், மருத்துவ கவுன்சிலின் இணையதளமான mcc.nic.in -லும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 1.35 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59,785 பேர் அதாவது 48.57% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து 31239 மாணவர்கள் தமிழ் வழியில் தேர்வு எழுதியிருந்தனர்.

தேசிய அளவில் தமிழக மாணவர் கார்வண்ணபிரபு 5-ம் இடம் பிடித்துள்ளார். மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவில் இவர் தேர்வு எழுதியிருந்தார்.

தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த தேர்வில் 39.56% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நடப்பு ஆண்டில் தேர்ச்சி விகிதம் சுமார் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,97,042 பேர் அதாவது 56.50% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக டெல்லியில் 74.92% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள் 2019 தளத்துக்குச் செல்ல கிளிக் செய்க...

தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?

மேற்கண்ட இணையதளத்துக்கு சென்று நீட் 2019 தேர்வு முடிவுகள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்க. பின்னர், தங்களது பதிவு எண்ணை கொடுத்து சப்மிட் (submit)-ஐ கிளிக் செய்தால், தேர்வு முடிவுகள் வெளியாகும். அதனை பதிவிறக்கம் செய்யலாம்.

நீட் தேர்வு கட்-ஆப் மதிப்பெண்கள் குறித்த விபரங்கள்:

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய டெண்டல் கவுன்சில் மெரிட் பட்டியலை தயார் செய்யும்.

மெரிட் பட்டியலோடு ரேங்க் பட்டியலும் தயாரிக்கப்படும், மாணவர்கள் தங்களது ரேங்க்-க்கு ஏற்றது போல கல்லூரிகளை தேர்வு செய்துகொள்ளலாம்.

பொதுப்பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களை பெற முடியும். எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்கள் 40 சதவிகித மதிப்பெண்களை பெற வேண்டும்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 சதவிகித மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

இந்திய மருத்துவக் கவுன்சில் மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதியை பின்னர் அறிவிக்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை கலந்தாய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.

 




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





அய்யகோ தாக்கப்பட்டாரா நேசமணி!

First published: June 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்