முகப்பு /செய்தி /கல்வி / Neet: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

Neet: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

நீட் முடிவுகள்

நீட் முடிவுகள்

Neet Exam Result 2022: மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகின்றன.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும்  ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது.  இந்தியாவில் 497 நகரங்களிலும் வெளிநாடுகளில்  14 நகரங்களிலும் என மொத்தம் 3,570 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர்.

7 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் நீட் தேர்வை எழுதியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. . தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதம் ஆனதை தொடர்ந்து நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது. இதன் காரணமாக பொறியியல் கலந்தாய்வும் தள்ளிப்போனது. இந்நிலையில் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று காலை வெளியிடுகிறது. மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

NEET முடிவு 2022 மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்வது எப்படி

NTA இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் -- neet.nta.nic.in

முகப்புப் பக்கத்தில், சமீபத்திய அறிவிப்பின் கீழ் ‘NEET 2022 Result’ என்பதைக் கிளிக் செய்யவும்

அடுத்த சாளரத்தில் NTA NEET விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட சான்றுகளை உள்ளிடவும்

NEET 2022 முடிவைக் கிளிக் செய்து அணுகவும்

First published:

Tags: MBBS, Neet, NEET Result