இளநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிடுகிறது.
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இதில், தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். மேலும், கொரோனா தொற்றுக்கு ஆளான மாணவர்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்ததால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு நேற்று முன்தினம் மறு தேர்வு நடத்தப்பட்டது.
சென்னையில் இரண்டு மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 188 பேர் மறு தேர்வு எழுதினர். மேலும், கடந்த 12-ம் தேதியே நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மறு தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகின்றன. தேர்வு முடிவுகளை www.ntaneet.ac.in என்ற இணையத்தில் இன்று காலை தெரிந்துகொள்ளலாம்.
மாணவர்கள், தங்களது விவரங்களை பதிவிட்டு நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.