NEET Result 2019: நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

தேசிய தேர்வு முகமையின் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவு அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டை குறிப்பிட்டு அறிந்துகொள்ளலாம்.

NEET Result 2019: நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: June 5, 2019, 8:29 AM IST
  • Share this:
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்த முடிவுகளை இணையதளம் மூலம் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, கடந்த மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்டது.

இதில், பங்கேற்க 15 லட்சத்து 19,375 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். ஃபோனி புயல் தாக்கியதால், ஒடிசாவில் 20-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. 5-ம் தேதி நடத்தப்பட்ட தேர்வில் ரயில் தாமதத்தால் கலந்துகொள்ள முடியவில்லை என்று கர்நாடகத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்தனர். அந்த மாணவர்களுக்கும் 20-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.


நாடு முழுவதும் 156 நகரங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் 14 லட்சத்து 10,754 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்தத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

இதனை தேசிய தேர்வு முகமையின் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவு அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டை குறிப்பிட்டு அறிந்துகொள்ளலாம். இதில், மாணவர்களின் தேசிய அளவிலான தரவரிசை மற்றும் பிரிவு வாரியான தரவரிசை இடம்பெறும்.

தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதியை மருத்துவ கலந்தாய்வுக்கான குழு வெளியிடும்.அகில இந்திய அளவிலான 15 சதவீத இடஒதுக்கீட்டுக்கும் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also see... ”அப்பா, அம்மாவை கயிற்றில் தொங்கவிட்டதை பார்த்தேன்: 3 வயது குழந்தை வாக்குமூலம்- செவிலியர் மரணத்தின் பின்னணி

Also see...




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see...




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்