NEET Result 2019: நீட் தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாகும் என்று தகவல்... எப்படி தெரிந்து கொள்வது..?

தேசிய தேர்வு முகமையின் இணையதளமான ntaneet.nic.in -ல் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

NEET Result 2019: நீட் தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாகும் என்று தகவல்... எப்படி தெரிந்து கொள்வது..?
நீட் தேர்வு
  • News18
  • Last Updated: June 4, 2019, 7:15 PM IST
  • Share this:
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5 மற்றும் 20-ம் தேதிகளில் நடந்த நிலையில், விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

எம்.பி.பி.எஸ் எனும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ம் தேதி நடந்தது. கடந்த காலங்களில் சி.பி.எஸ்.இ நீட் தேர்வு நடத்திய நிலையில், இந்த ஆண்டு முதல் இதற்கென தேசிய தேர்வு முகமை உருவாக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.

எனினும், நீட் தேர்வு நடந்த அன்று கர்நாடகாவில் ரயில் தாமதம் காரணமாக சுமார் 600 மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. மேலும், ஒடிசா மாநிலத்தில் போனி புயல் காரணமாக நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கவில்லை.


மேற்கண்ட இரு காரணங்களால் 5-ம் தேதி எழுத முடியாதவர்களுக்கு 20-ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வு எழுதியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்னும் சற்று நேரத்தில் வெளியிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய தேர்வு முகமையின் இணையதளமான ntaneet.nic.in -ல் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.மேலும், மருத்துவ கவுன்சிலின் இணையதளமான mcc.nic.in -லும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் 2019 தளத்துக்குச் செல்ல கிளிக் செய்க...

தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?

மேற்கண்ட இணையதளத்துக்கு சென்று நீட் 2019 தேர்வு முடிவுகள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்க. பின்னர், தங்களது பதிவு எண்ணை கொடுத்து சப்மிட் (submit)-ஐ கிளிக் செய்தால், தேர்வு முடிவுகள் வெளியாகும். அதனை பதிவிறக்கம் செய்யலாம்.

 




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





அய்யகோ தாக்கப்பட்டாரா நேசமணி!

First published: June 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்