ஹோம் /நியூஸ் /கல்வி /

NEET PG |10 நாட்களுக்குள் முதுநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

NEET PG |10 நாட்களுக்குள் முதுநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

காட்சி படம்

காட்சி படம்

Neet PG | வினாத்தாளில் குறிப்பிட்ட இரண்டு கேள்விகள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன(Technically incorrect). எனவே, அந்த  இரண்டு கேள்விகளுக்கு பதிலளித்த அனைத்து தேர்வர்களுக்கும் முழு மதிப்பெண்கள் அளிக்கப்படும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  nbe.edu.in and natboard.edu.in ஆகிய இணைய தளங்களில் இருந்து தேர்வு முடிவுகளின் முழு விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

  முதுநிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில், "தேர்வு நடத்தி 10 நாட்களுக்குள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே  முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பது பாராட்டுக்கூறியது. nbe.edu.in என்ற இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.

  2022 முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  கட்ஆப் மதிப்பெண்: 

  மருத்துவ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான நீட் தேர்வின் கட்ஆப் மதிப்பெண் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு, மொத்த மதிப்பெண் 800ல், பொதுப் பிரிவினருக்கு 275ம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதிகள்(எஸ்.சி), பழங்குடியினர் (எஸ்டி) பிரிவினருக்கு 245ம், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 260 மதிப்பெண்ணும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

  கடந்தாண்டு, இரண்டு சுற்று  நேரடி கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகும் 8,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. இதன் காரணமாக,  நீட் கட்ஆப் மதிப்பெண்ணில் 15 சதவீதம் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதன், காரணமாக மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கப்பட்டது.

  ஆண்டுபொதுப் பிரிவினர்எஸ்சி/எஸ்டி/ஓபிசிநிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்
  2021 (15 சதவீதம் குறைபிக்கு பிந்தைய மதிப்பெண்)247210229
  2022275245260

  தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி?   

  nbe.edu.in என்று இணையதளத்திற்கு சென்று தேர்வு முடிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.

  தேர்வுக்கு விண்ணப்பித்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs), இந்தியாவின் வெளிநாடு வாழ் குடிமக்கள் (OCIs),  இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள்(PIOs), வெளிநாட்டு குடிமக்கள் (Foreign Nationals) ஆகிய பிரிவினர்கள் பொதுப் பிரிவினர்களாகவே கருதப்படுவர்.

  வினாத்தாளில் குறிப்பிட்ட இரண்டு கேள்விகள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன(Technically incorrect). எனவே, அந்த இரண்டு கேள்விகளுக்கு பதிலளித்த அனைத்து தேர்வர்களுக்கும் முழு மதிப்பெண்கள் அளிக்கப்படும். 

   50% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு (All India Quota Seats) பட்டியல் தனியாக வெளியிடப்படும். மாநில தொகுப்பு இடங்களுக்கான  (State Government Quota Seats ) மதிப்பெண் பட்டியலை அந்தந்த மாநிலங்கள் தனித்தனியே வெளியிடும். 

  தேர்வர்களின் தனி நபர் மதிப்பெண் பட்டியல் வரும் 8ம் தேதி அல்லது அதற்கு பின்போ https://nbe.edu.in/ என்ற இணையத்தளத்தில் வெளியிடப்படும்.    

  Published by:Salanraj R
  First published:

  Tags: Neet