Home /News /education /

NEET PG 2022: நீட் முதுகலை தேர்வு, ஆன்லைன் விண்ணப்பங்களைத் திருத்த அரிய வாய்ப்பு

NEET PG 2022: நீட் முதுகலை தேர்வு, ஆன்லைன் விண்ணப்பங்களைத் திருத்த அரிய வாய்ப்பு

NEET Exam

NEET Exam

NEET PG 2022: விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தேர்வு நடைபெறும் நகரம், தேசியம் உள்ளிட்ட விவரங்களை மாற்ற முடியாது

2022 நீட் முதுகலை தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்பை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தற்போது இந்த வசதியைப் பயன்படுத்தி திருத்தங்களை ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் செய்துகொள்ளலாம். இருந்தாலும், விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தேர்வு நடைபெறும் நகரம், தேசியம் உள்ளிட்ட விவரங்களை மாற்ற முடியாது.

nbe.edu.in என்ற இணையதள முகவரியில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.  மார்ச் 29ம் தேதி முதல்  ஏப்ரல் 7ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பதாரர்கள், இணையதளத்திற்குச் சென்று, தங்களுடைய விவரங்களை உறுதி செய்து, தேவைப்படுகின்ற திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2022 நீட் முதுகலைத் தேர்வு: 





























 

 

*ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களில் சமர்ப்பிப்பதற்கான திருத்தப்பட்ட கால அவகாசம்

 
1 5 ஜனவரி முதல் 25 மார்ச் வரை
திருத்துவதற்கான வாய்ப்பு29 மார்ச்  முதல்  ஏப்ரல் 7 வரை
தவறான புகைப்படங்கள் சரிசெய்வதற்கான கடைசி கால அவகாசம்26 ஏப்ரல் முதல் 30 ஏப்ரல் வரை
அட்மிட் கார்ட் வெளியாகும் நாள்மே 16
தேர்வு தேதிமே 21
தேர்வு முடிவுகள்ஜூன் 20

விண்ணப்பப் படிவங்களில் செய்த திருத்தங்களின் காரணமாக (கூடுதல்) கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், கட்டணம் செலுத்தப்பட்ட பிறகே, திருத்தியமைக்கப்பட்ட விவரங்கள் விண்ணப்பப் படிவத்தில் இடம்பெறும்.

திருத்தங்களை மேற்கொள்வதற்கு வேறு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது என்பதால் விண்ணப்பதாரர்கள் திருத்தங்களை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 022 – 61087595 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.  helpdesknbeexam@natboard.edu.in என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வு: 

கடந்தாண்டு, நாட்டில் அதிகரித்து காணப்பட்ட  Covid-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மனித வளங்களின் தேவை அதிகரிக்கும் சூழல் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் ஒரு அம்சமாக, 2021, நீட் முதுகலை தேர்வை குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.  நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடிய மாணவர்களை மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் தொடர்புகொண்டு கொவிட்-19 பணியில் அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இந்த எம்பிபிஎஸ் மருத்துவர்களின் சேவையை கொவிட்-19 மேலாண்மையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.



இறுதியில், 2021 ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறுவதாக  இருந்த இத்தேர்வு  செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது. தேர்வு முடிவுகளும் வெளியானது. ஆனால், மருத்துவ/ பல்மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் அரசின்  முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்ததால் 2021  மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனைக் கண்டித்து தலைநகர் டெல்லியில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடிய மாணவர்களும், முதுகலை மருத்துவ மாணவர்களும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதனையடுத்து, அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் அரசு கொண்டு வந்த இடஒதுக்கீடு முறை செல்லும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்தது.

இந்நிலையில், 2022 நீட் முதுகலை மருத்துவப் படிப்புக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அதில், மார்ச் 12ம் தேதி நாடு முழுவதும் இந்த கல்வியாண்டிற்கான நீட் முதுகலை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.   ஆனால், 2021 ஆண்டிற்கான கலந்தாய்வு மார்ச மாதம் வரை நடைபெற்ற நிலையில், மார்ச் 12ம் தேதி தேர்வு நடத்தினால் தங்களின்   வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகும் என்று விண்ணப்பதார்கள் தெரிவித்திருந்தனர். ஏனெனில், 2021 கலந்தாய்வில் போதிய இடத்தினை பெறாத மாணவர்கள் 2022 நுழைவுத் தேர்வை மருவாய்ப்பாக கருதி வந்தனர். இதன் தொடர்ச்சியாக, மே 12ம் தேதி நடக்கவிருந்த 2022     நீட்  முதுகலை மருத்துவத் தேர்வு எட்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டு மே 21ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
Published by:Salanraj R
First published:

Tags: Neet, Neet Exam

அடுத்த செய்தி