Home /News /education /

NEET- PG 2022 கவுன்சிலிங் குறித்து முக்கிய அப்டேட் வெளியீடு

NEET- PG 2022 கவுன்சிலிங் குறித்து முக்கிய அப்டேட் வெளியீடு


NEET-PG 2022 கவுன்சிலிங்

NEET-PG 2022 கவுன்சிலிங்

வழக்கமாக, NEET-PG ஜனவரியில் நடத்தப்படும் மற்றும் மார்ச் மாதத்தில் கவுன்சிலிங் தொடங்கும், ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு தாமதமாக நடைபெறுகின்றது.

    கடந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் முதுகலைத் தேர்வில் முடிவுகள் ஏற்கனவே வெளியான நிலையில் கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீட் முதுகலை எழுத்துத் தேர்வு முடிவுகள் ஜூன் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. யுஜி மற்றும் பிஜிக்கான நீட் கவுன்சிலிங் செயல்முறையை மேற்கொள்ள உச்ச நீதிமன்றத்தால் ஒப்படைக்கப்பட்ட எம்.சி.சி., மருத்துவ ஆலோசனைக் குழுவால் நடத்தப்படுகிறது.

    வழக்கமாக, NEET-PG ஜனவரியில் நடத்தப்படும் மற்றும் மார்ச் மாதத்தில் கவுன்சிலிங் தொடங்கும், ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு தாமதமாக நடைபெறுகின்றது. அதன்படி இந்த ஆண்டு NEET-PG 2022 கவுன்சிலிங் செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீட் முதுகலை நுழைவு தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், இந்த கலந்தாய்வின்போது தங்களின் மருத்துவ பிரிவு, கல்லூரிகளை தேர்வு செய்வார்கள்.

    மருத்துவ கலந்தாய்வு குழு, ஆன்லைன் முறையில் இந்த கலந்தாய்வை நடத்துகிறது. 2021ம் கல்வியாண்டில் கலந்தாய்வில் 748 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. எனவே, கட் ஆப் மதிப்பெண்கள் இல்லாமல் சிறப்பு கலந்தாய்வு சுற்றை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

    2021ம் கல்வியாண்டில் NEET PG கலந்தாய்வில் மொத்தம் 1,456 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, இடங்கள் வீணாவதைத் தடுக்கவும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் கட் ஆப் மதிப்பெண்கள் இல்லாமல் சிறப்பு கலந்தாய்வு சுற்றை நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Neet Exam, NEET Result

    அடுத்த செய்தி