முதுகலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் விபர பட்டியலை (Score Card) நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் அடிப்படையில், முதுகலை படிப்புகளுக்கான கலந்தாய்வில் மாணவர்கள் கலந்து கொள்வார்கள்.
முன்னதாக, 2022 முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், குறைந்தபட்ச மதிப்பெண் (Cut-Off ), தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் (Marks), தகுதி பட்டியல் (Rank List) ஆகியவை வெளியிடப்பட்டன.
ஆண்டு | பொதுப் பிரிவினர் | எஸ்சி/எஸ்டி/ஓபிசி | நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் |
2022 | 275 | 245 | 260 |
தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்கள், இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான (MD/MS/PG Diploma Courses) கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
nbe.edu.in என்ற இணைய தளத்தில் மதிப்பெண் விபர பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்க: 71% அரசுப் பள்ளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்புடைய வகையில் உள்ளன - மத்திய அரசு
முகப்பு பக்கத்தில், NEET-PG என்ற இணைப்பை கிளிக் செய்து, பதிவெண் மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழைய வேண்டும்.
Download NEET-PG Scorecard என்பதை கிளிக் செய்து, உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்திட வேண்டும்.
இந்த மதிப்பெண் விபர பட்டியலை கலந்தாய்விற்கு எடுத்து செல்ல வேண்டும். 50% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு (All India Quota Seats) பட்டியல் தனியாக வெளியிடப்படும். மாநில தொகுப்பு இடங்களுக்கான (State Government Quota Seats ) மதிப்பெண் பட்டியலை அந்தந்த மாநிலங்கள் தனித்தனியே வெளியிடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.