NEET PG admit card 2022 released: நீட் முதுகலை தகுதித்தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதிச் சீட்டினை https://nbe.edu.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மே 21ம் தேதி காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இத்தேர்வு நடைபெறும். கணினி வழியில் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தனித்துவமான பதிவுக்கணக்கு (Registration Number), கடவுச் சொல் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பயன்படுத்தி அனுமதிச் சீட்டை பதிவிறக்க செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் பதிவு செய்த பின்னர், குறுந்தகவல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பதிவுக் கணக்கு எண் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும்.
இணைய வழி விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட பிறந்த தேதி தொடர்பான தகவலை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய பயன்படுத்த வேண்டும்.
ஒரே நேரத்தில் அதிகப்படியான விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்ய முயற்சி செய்வதால், தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் போதிய கால அவகாசத்தில் அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்ற ஆண்டு நடத்தப்பட்ட நீட் முதுகலை தகுதித்தேர்வுக்குப்பின், மேற்கொள்ளப்பட்ட முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கை பணிகள் அண்மையில்தான் நிறைவடைந்தன என்றும்,2022 மே 21ம் தேதி நீட் நுழைவுத் தேர்வுக்கு காலஅவகாசம் மிகவும் குறைவாக இருக்கிறது என்றும் கூறி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் தெரிவித்திருந்தன.
— Indian Medical Association (@IMAIndiaOrg) May 12, 2022
அவை இவ்வாண்டு தகுதித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் முதுகலை தகுதித்தேர்வை ஒத்திவைத்தால் அதற்கு அடுத்த நடைமுறைகள் யாவும் காலதாமதமாகிவிடும் என்று கூறி, மனுதாரர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது.
Published by:Salanraj R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.