மருத்துவ படிப்புகளுக்கான நீட் தகுதி தேர்வெழுதிய தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜலெட்சுமி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதாக வந்த செய்தி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உயிரிழந்த மாணவி, கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வெழுதி மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், மூன்றாவது முறையாக இந்தாண்டு நீட் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வரும் 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன்பு உத்தேச விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், நீட் தேர்வு தோல்வி விரக்தி காரணமாக மாணவி ராஜலெட்சுமி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும், துயரமும் தெரிவித்து வருகின்றனர்.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ், " நீட் விலக்கு தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர், மாணவி ராஜலட்சுமி ஏற்கனவே இரு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இப்போது மூன்றாவது முறை. இந்த முறையும் அவரால் போதிய மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்றால், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு எவ்வளவு கடினமானது என்பதை புரிந்து கொள்ள முடியும். நடப்பாண்டில் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூர் முரளிகிருஷ்ணா, அரியலூர் நிஷாந்தி ஆகிய மூவர் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டனர். ராஜலட்சுமி நான்காவது உயிரிழப்பு. வரும் 7-ஆம் தேதி நீட் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இனியும் தற்கொலைகள் நிகழாமல் அரசு தடுக்க வேண்டும்" என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் வாசிக்க: 3வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் தற்கொலை... சங்கரன்கோவிலில் சோகம்...
ஏற்கனவே பல்லாயிரம் முறை கூறியவாறு, " நீட் விலக்கு தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு ஆகும். இதை புரிந்து கொண்டு நீட் சட்டத்திற்கு விலக்கு பெறுவதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்; மத்திய அரசு இதற்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Neet, Neet Exam, NEET Result