நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு... மாணவர்களுக்கு அனுமதி என்ன? கட்டுப்பாடுகள் என்ன?

கோப்புப் படம்

நாடு முழுவதும் 3862 மையங்கள் அமைக்கப்பட்டு ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுத 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

  • Share this:
    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெறுவதை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு எண்.95 முகக் கவசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கும், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவருக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் 3862 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுத 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள 1,12,889 பேரில் 11236 மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் இருந்து விண்ணப்பித்துள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் 18 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. சென்னை மண்டலத்தில் 33 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. அதில் மொத்தம் 17,996 பேர் தேர்வு எழுதுகின்றனர்.மதுரை மாவட்டத்தில் 20 மையங்களில் 10,314 மாணவர்களும் கோவை மாவட்டத்தில் 7 மையங்களில் 6,057 பேரும் தேர்வெழுத உள்ளனர்.

    மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக அதாவது மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்வறைகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

    தேர்வு மையங்களிலேயே மாணவர்களுக்கு எண்-95 முகக் கவசம் வழங்கப்படும். ஹால் டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படம், 50 மில்லி லிட்டர் சானிடைசர் பாட்டில், குடிநீர் பாட்டில் தவிர மின்னணு சாதன பொருட்கள், கைகடிகாரம், கைப்பைகள், ஆபரணங்கள் உள்ளிட்ட வேறு எதையும் தேர்வு மையத்துக்குள் எடுத்து செல்ல கூடாது என்று தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.

    தேர்வர்கள் வெளிர்நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும், ஷு அணியக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published: