நீட் நுழைவுத் தேர்வில் வழக்கம் போல் இந்த ஆண்டும் ஒட்டு மொத்த தேர்ச்சியில் மாணவிகளின் எண்ணிக்கை 56.7% ஆக உள்ளது. 2022 கல்வியாண்டிற்கான மருத்துவ இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.
பொதுவாக, 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதமும், ஒட்டு மொத்த செயல்படும் அதிகரித்து காணப்படும். ஆனால், நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வில் இந்த நிலை கொஞ்சம் இந்த நிலை மாறியிருக்கும்.
நீட் தேர்வை அணுகும் மாணவிகள்: உயர்கல்வியைப் பொறுத்த வரையில், எம்.பி.பிஎஸ், கலை, அறிவியல், சமூக அறிவியல், சமூக சேவை போன்ற பொதுநிலை படிப்புகளில் (General - Academic Education) மாணவர்களை விட மாணவிகளை கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர். உதாரணமாக, ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ் பட்டம் வெளியேறுவபர்களில் 52% பேர் மாணவிகள் என மதிப்படப்படுகிறது. எம்பிபிஎஸ் படிப்பில், சராசரியாக 100 ஆண்களுக்கு 110 பெண்கள் கல்வி பயின்று வருவதாக மத்தியக் கல்வி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதேசமயம் பி.டெக் தொழில்நுட்ப படிப்பில் 100 ஆண்களுக்கு 42 பெண்கள் என்ற விகிதம் மட்டுமே உள்ளது.
இந்தாண்டு, நீட் தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான (10,64,794) மாணவிகள் விண்ணப்பத்திருந்த நிலையில், 10,01,015 மாணவிகள் தேர்வை எதிரிகொண்டனர். இதில், 563902 மாணவிகள் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களைப் பொறுத்த வரையில், 8,07,538 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 7,63,545 பேர் மட்டுமே தேர்வை எதிர்க் கொண்டனர். இதில், 4,29,160 தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இதில் மாணவர்கள் எண்ணிக்கை 43,993 ஆகவும், மாணவிகள் எண்ணிக்கை 63,779 ஆகவும் உள்ளது. தேர்வெழுதிய மாணவிகளில் 56% பேரும், தேர்வெழுதிய மாணவர்களில் 57.5% பேரும் தகுதி பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எனவே, மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை மாணவர்களை விட மாணவிகள் அதிகளவு அணுகி வந்தாலும், அவர்களின் தேர்ச்சி விகிதம் மாணவர்களை விட குறைந்து காணப்படுகிறது.
முதல் 50 நபர்கள் பட்டியல்: நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 50 நபர்கள் கொண்ட பட்டியலில், வெறும் 18 மாணவிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இதில், ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா தேசிய அளவில் முதல் இடத்தையும், கர்நாடக மாணவி ருச்சா 3வது இடத்தையும் பெற்றுள்ளனர். இந்த 18 பேரில், பட்டியல் பிரிவு, பட்டியல் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணவிகள் யாரும் இடம்பெறவில்லை.
மேலும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 20 மாணவிகளில், பட்டியல் பிரிவு, பட்டியல் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.
நடந்து முடிந்த ஜேஇஇ தேர்வில், 24 பேர் முதலிடம் பெற்றனர். இதில், மாணவிகளின் எண்ணிக்கை 2 என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: நீட் தேர்வு முடிவுகள்: இந்த கட் ஆப் எடுத்தால் மருத்துவ இடங்கள் உறுதி
இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும் கல்வியாளர்கள், "தேர்வுகளை எழுத நீண்ட தூரத்துக்குப் பயணம் செல்ல வேண்டியுள்ளதால் விண்ணப்பிக்கும் மாணவிகளில் பலர் தேர்வை எதிர் கொள்வதில்லை. மேலும், நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் தேவைப்படும். இதற்கு, அதிக பணம் செலவாகும் என்பதால் தாங்களாகவே தேர்வுகுத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Neet, Neet Exam, NEET Result