நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரி புதிய மனு - உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரி புதிய மனு - உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

கோப்புப் படம்

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட புதிய மனுக்களின் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

 • Share this:
  கொரோனோ நோய் தொற்று காரணத்தால் தள்ளிவைக்கப்பட்ட நீட் தேர்வு, வருகிற 13ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக 11 மாணவர்கள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தேர்வை ரத்து செய்து உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

  இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி ஆறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் புதுவை அரசு தொடர்ந்த மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், நீட் தேர்வுக்கு தடையில்லை என திட்டவட்டமாக அறிவித்தது.  மேலும் படிக்க...சீன நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்த பப்ஜி கார்பரேஷன் - தடையை தாண்டி வருகிறதா பப்ஜி கேம்?

  இதனைதொடர்ந்து தேர்வை தள்ளிவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் புதியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி அசோக் பூஷன் அமர்வு முன்பு இன்று  வருகிறது. இதனிடையே தமிழகத்தில் நீட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  Published by:Vaijayanthi S
  First published: