NEET Exam : நீட் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

நீட் தேர்வு

நீட் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறு தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்.

  • Share this:
    நீட் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற இருக்கும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் மற்றும் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இணையதள முகவரி மூலம் விண்ணப்ப படிவ எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    செப்டம்பர் 12ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, மொத்தம் 202 நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்பு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகளை http://neet.nta.nic.in இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நீட் தேர்வு திட்டமிட்ட தேதியில் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மருத்துவ மாணவர் சேர்க்கைகான நீட் தேர்வு வரும் 12- ஆம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 543 மருத்துவ கல்லூரிகள், 313 பல் மருத்துவ கல்லூரிகள், 914 ஆயுஷ் மற்றும் 47 கால்நடை அறிவியில் கல்லூரிகளில் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

    சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பில் 25,000 ஆயிரம் மாணவர்கள் மறு தேர்வு எழுதுவதாகவும், சி.பி.எஸ்.இ தேர்வுகளும் போட்டி தேர்வுகளும் அடுத்தடுத்து வருவதால் நீட் தேர்வினை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது வாதிட்ட மாணவர்கள் தரப்பு வழக்கறிஞர், நீட் தேர்வில் 200 கேள்விகள் வழங்கப்பட்டு அதில் 180 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற புதிய முறை அமல்படுத்தபட உள்ளதாகவும், இது மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். எனவே தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

    மாணவர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வு, அவர்களை, தேசிய தேர்வு முகமையை அணுகுமாறு அறிவுறுத்தியது. தேசிய தேர்வு முகமை போன்ற அமைப்புகளுக்கு நீதிமன்றங்களின் மூலம் அழுத்தம் கொடுக்க முயற்சிக்க கூடாது என மாணவர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். தேர்விற்கான அனுமதி சீட்டுக்களை மாணவர்கள் பெற்று விட்ட நிலையில் 16 லட்சம் பேரின் கடுமையான உழைப்பை புறந்தள்ள முடியாது எனறும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    Must Read : போலி கொரோனா தடுப்பூசிகளை எப்படி கண்டுபிடிப்பது? : மத்திய அரசு விளக்கம்

    சிபிஎஸ்இ மறு தேர்வு முடிவுகள் மாணவர் சேர்க்கை கலந்துரையாடலின் போது தான் தேவைப்படும் என்றும், எனவே தேர்வை ஒத்திவைக்க உத்தரவிடக் கூடாது என்றும் தேசிய தேர்வு முகமை வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அதே நேரத்தில், தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறு தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை தேசிய தேர்வு முகமை பரிசீலக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published: