திட்டமிட்டபடி நீட் தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை

திட்டமிட்டபடி நீட் தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை

கோப்புப் படம்

Neet Exam | மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. இந்நிலையில் தேர்வெழுத வரும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

  அதன்படி தேர்வு மையங்களில் முகக்கவசங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாணவர்களும், கண்காணிப்பாளர்களும் தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் உடல்வெப்ப சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மாணவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உடல்வெப்பம் அதிகமாக இருந்தாலோ அதாவது 99.4 டிகிரிக்கு அதிகமாக இருந்தாலோ, கொரோனா அறிகுறிகள் இருந்தாலோ மாணவர்கள் தனி அறையில் தேர்வெழுத அனுமதிக்கப்பட வேண்டும்.

  தனக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்றும், கொரோனா பாதித்தவருடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் மாணவர்கள் கண்காணிப்பாளர் முன்னிலையில் எழுத்துப்பூர்வ உறுதி அளிக்க வேண்டும்.  தேர்வறைக்குள் நுழையும் போது கூட்டமாக செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு இடையே 6 அடி தூர இடைவெளி இருக்க வேண்டும். மாணவர்கள் தாங்கள் அணிந்து வரும் முகக்கவங்களை அகற்றி விட்டு, தேர்வு மையத்தில் வழங்கப்படும் புதிய முகக்கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும். தேர்வு முடிந்த பின் மாணவர்கள் ஒவ்வொருவராக மட்டுமே வெளியேற வேண்டும்.

  மாணவர்கள் தங்களுக்கென பிரத்யேகமான குடிநீர் பாட்டில்களையும். சானிடைசரையும் கொண்டு வர வேண்டும். குடிநீர் பாட்டில்கள் மற்றும் சானிடைசர் நீங்கலாக அனுமதிச்சீட்டை மட்டுமே மாணவர்கள் எடுத்துச்செல்ல முடியும். 50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்குள்ளும், இதர 50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்கு வெளியேயும் கண்காணிப்பில் ஈடுபடுவர். மாணவர்கள் கூட்டமாக செல்வதை தடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
  Published by:Sankar
  First published: