• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கான தேதியை அறிவித்தது மத்திய அரசு..

நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கான தேதியை அறிவித்தது மத்திய அரசு..

நீட் தேர்வு (கோப்புப் படம்)

நீட் தேர்வு (கோப்புப் படம்)

மருத்துவ படிப்புகளுக்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

  • Share this:
    ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு முன்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில்,கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது போல, நீட் தேர்வையும் தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து நீட் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் நீட் தேர்வு நடத்துவது இப்போதைக்கு சாத்தியமில்லை என அரசுக்கு தேசிய தேர்வு முகமை பரிந்துரைத்ததாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், டிவிட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    மேலும் படிக்க...

    போலீஸ் காவலில் நடந்த வதை மரணங்கள்: இழப்பீட்டை இழுத்தடிக்கும் தமிழக அரசு..

    அதில் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதிக்குள் நடைபெறும் எனவும் கூறியுள்ளார். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பொக்ரியால் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: