நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடுவை நீட்டிக்க மாணவர்கள் கோரிக்கை

Cyclone Gaja | நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதிக்கு இன்னும்  4 நாட்கள் மட்டுமே இருப்பதால், இறுதி தேதியை நீடிக்குமாறு கஜாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடுவை நீட்டிக்க மாணவர்கள் கோரிக்கை
நீட் தேர்வு (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: November 26, 2018, 8:28 AM IST
  • Share this:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீட் தேர்விற்கு  விண்ணப்பிக்கும் தேதியினை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை  சிதைத்துள்ள நிலையில்,  அடிப்படை தேவைகள் கிடைக்காமல்  மக்கள் அல்லாடி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு மே மாதம் 5-ந் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க, இம்மாதம் 30-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இதுவரை மின்சாரம் முழுமையாக வழங்கபடவில்லை.  இணையதளம்  வாயிலாக மட்டுமே நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால், மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாத நிலை உருவாகி உள்ளது.


எனவே பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த  மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

NEET Student, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் (கோப்புப் படம்)
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் (கோப்புப் படம்)


விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதிக்கு  இன்னும்  4 நாட்கள் மட்டுமே இருப்பதால்,மனிதாபிமான அடிப்படையிலும், மாணவர்களின் எதிர்கால நலனை கருதியும், மத்திய அரசு இதை அணுக  வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மாணவர்களின் நலன் சார்ந்து சிந்தித்து மத்திய அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Also see..
First published: November 26, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்