நீட் தேர்வு சிறுபான்மையினரின் கல்வி நிறுவன உரிமைகளை பறிக்கும் வகையில் இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நீட் தேர்வு, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவன உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீட் தேர்வு சிறுபான்மையினரின் கல்வி நிறுவன உரிமைகளை பறிக்கும் வகையில் இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
நீட் தேர்வு (கோப்புப் படம்)
  • Share this:
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவன உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, “சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அரசு உதவி பெறாத மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும் நீட் சட்டம் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர். இதனை அடுத்து, இது தொடர்பான அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுவதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

First published: April 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading