முகப்பு /செய்தி /கல்வி / நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்வு..!

நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்வு..!

மாதிரி படம்

மாதிரி படம்

நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) மூலம் நடத்தப்படுகிறது. மத்திய அரசின், தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு ஆங்கிலம், தமிழ் உள்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது.

2023ம் கல்வியாண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 7ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனிடையே நீட் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை. அதன்படி, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் உள்ளிட்ட தேர்வு தொடர்பான பிற தகவல்கள் பின்னர் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் விண்ணப்பக் கட்டணத்தை கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.100 உயர்த்தியுள்ளது தேசிய தேர்வு முகமை. பொதுப் பிரிவினருக்கு ரூ.1700, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.1,600 மற்றும் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.1,000 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Neet, Neet Exam