Home /News /education /

NEET Exam 2022 | மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு..

NEET Exam 2022 | மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

NEET Exam 2022 | மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நீட் தேர்வு  என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேருவதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏப். 2ம் தேதி முதல் தேர்வுகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் என்றும் மே 7ம் தேதியுடன் முன்பதிவு காலம் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்களில் மாணவர்கள் திருத்தம் மேற்கொள்ள 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். நடப்பாண்டில் தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணையை தேசிய தேர்வாணையம் வெளியிடும். மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான நேர்முக தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Medical Courses, Neet, Neet Exam, Tamilnadu

    அடுத்த செய்தி