தமிழகத்தில் நடப்பாண்டு மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்படுமா? கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கம்

தமிழகத்தில் நடப்பாண்டு மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்படுமா? கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கம்

மருத்துவ இடங்கள் கிடைக்காதவர்கள், மருத்துவ துறை சார்ந்த பல துறைகளில் படிக்க வாய்ப்புள்ளதாகவும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் அஸ்வின் அறிவுரை கூறியுள்ளார்.

மருத்துவ இடங்கள் கிடைக்காதவர்கள், மருத்துவ துறை சார்ந்த பல துறைகளில் படிக்க வாய்ப்புள்ளதாகவும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் அஸ்வின் அறிவுரை கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நீட் தேர்வு எழுதியுள்ள தமிழக மாணவர்கள் நடப்பாண்டு தங்களுக்கு மருத்துவ இடம் கிடைக்குமா என ஏக்கத்துடன் உள்ளனர். எந்த மதிப்பெண்ணுக்கு சீட் கிடைக்கும் மற்றும் தமிழகத்தில் நடப்பாண்டு மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் அஸ்வின் என்பவர் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண் பட்டியலை தேசிய தேர்வு முகமையில் இருந்து பெற்றுள்ளார். அதன்படி, 600 மதிப்பெண்களுக்கு அதிகமாக 135 பேரும், 550 மதிப்பெண்களுக்கு அதிகமாக 499 பேரும், 500 மதிப்பெண்களுக்கு அதிகமாக 1,329 பேரும் பெற்றுள்ளனர்.

450 மதிப்பெண்களுக்கு மேல் 2,976 பேரும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 5,634 பேரும் பெற்றுள்ளனர். 350 மதிப்பெண்களுக்கு மேல் 9,339 பேரும், 300 மதிப்பெண்களுக்கு மேல் 14, 297 பேரும் பெற்றுள்ளனர்.

மதிப்பெண் பட்டியலை வைத்து ஆய்வு செய்துள்ள அஸ்வின், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டு தமிழகத்தில் நீட் தேர்விற்கான கட் ஆஃப் 80 முதல் 100 மதிப்பெண்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் எடுத்திருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை எனவும் அஸ்வின் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி OC பிரிவினர் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும் என்றும், BC பிரிவினர் 460 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறுகிறார். BCM பிரிவினர் 440-க்கு மேலும், MBC பிரிவினர் 400-க்கு மேலும், SC பிரிவினர் 360-க்கு மேலும் எடுத்திருக்க வேண்டுமென அஸ்வின் கூறுகிறார். SCA பிரிவினர் 350-க்கு மேலும், ST பிரிவினர் 320-க்கு மேலும் எடுத்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு 450 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் 400-ல் இருந்து 450 மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கு அரசு இடங்கள் நிச்சயம் கிடைக்கும் என அஸ்வின் கூறுகிறார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக இடஒதுக்கீட்டில் பொதுப்பிரிவினர் பயனடைந்தாலும், கூடுதல் சீட் ஒதுக்கீட்டில் மற்ற பிரிவினரும் பயனடைய வாய்ப்புள்ளதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மருத்துவ இடங்கள் கிடைக்காதவர்கள், மருத்துவ துறை சார்ந்த பல துறைகளில் படிக்க வாய்ப்புள்ளதாகவும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் அஸ்வின் அறிவுரை கூறியுள்ளார்.

Also see... நீட் முதுகலை தேர்வு முடிவு... இந்திய அளவில் தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி

Also see...

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: