Home /News /education /

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 15-ம் தேதி முதல் ஆன்லைன் நீட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 15-ம் தேதி முதல் ஆன்லைன் நீட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

ஜூலை 26ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் நிலையில் ஜூன் 15ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆன்லைன் வாயிலாக நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் தேர்வுக்காக இந்த ஆண்டு பதிவு செய்துள்ள அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி ஆன்லைன் வாயிலாக அளிக்கப்பட இருக்கின்றது. ஆம்பிஸாப்ட் டெக்னாலஜி என்கின்ற தனியார் நிறுவனத்தின் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் நான்கு மணி நேரம் வீடியோக்கள் வாயிலாக பாடம் நடத்தப்படும். அதற்கடுத்த 4 மணி நேரம் மாணவர்களுக்குத் தேர்வுகள் வைக்கப்பட்டு பயிற்சிகள்  அளிக்கப்பட உள்ளது.

நடப்பாண்டில் 17,000 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால்  இவர்களுக்கு ஆரம்பம் முதல் சரிவர பயிற்சி அளிக்கப்படவில்லை. இணையதளம் வழியாக சில மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு அதுவும் பிறகு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், வரும் ஜூன் 15ம் தேதி முதல் ஆன்லைனில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூலை 26ம் தேதி தேர்வு நடக்கும் நிலையில், ஒரே ஒரு மாதம் நடத்தப்படும் இந்தக் குறுகிய கால பயிற்சி, அரசு மற்றும் அரசு உதவிபெறும்  பள்ளி மாணவர்களுக்கு உரிய பயனளிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: Government school, Neet Exam

அடுத்த செய்தி