நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: சென்னையை சேர்ந்த மாணவர் மீது புகார்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: சென்னையை சேர்ந்த மாணவர் மீது புகார்

மாதிரிப்படம்

  • Last Updated :
  • Share this:
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக சென்னையை சேர்ந்த மாணவர் மீது காவல் நிலையத்தில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் புகார் அளித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட மாணவர் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில், சென்னையைச் சேர்ந்த மருத்துவரின் மகன், நீட் தேர்வு எழுதும் போது ஆள்மாறாட்டம் செய்ததாகவும், தேர்விற்கான ஹால்டிக்கெட்டில் உள்ள படமும், மாணவனின் படமும் வேறு வேறாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக தேனி மருத்துவக்கல்லூரி வட்டாரத்தில் விசாரித்த போது, அந்த மாணவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தவர் என்றும் நடப்பாண்டு மகாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்று தேனி மருத்துவக்கல்லூரிக்கு தேர்வாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அந்த மாணவர் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும், மேல் விசாரணைக்காக மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு கல்லூரி முதல்வர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சென்னையை சேர்ந்த மாணவர் மீது காவல் நிலையத்தில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் புகார் அளித்துள்ளார்.

நீட் தேர்வு எழுதியவர் வேறு, வகுப்புக்கு செல்லும் மாணவர் வேறு என கிடைத்த புகாரின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணான தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு எழுதியவரின் ஹால்டிக்கெட்டில் உள்ள பெயர் கே.வி.உதித் சூர்யா என்றும், அவரின் தந்தை பெயர் வெங்கடேசன் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர், நீட் தேர்வில் 385 பெற்ற மதிப்பெண் பெற்றுள்ளதும், அதற்கான ஆவணமும் கிடைத்துள்ளது. ஆனால், ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள முகவரியில் உள்ள சென்னை தண்டையார் பேட்டை வீடு பூட்டிக் கிடக்கிறது. இதனிடையே ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய மாணவர் 2 நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

Video:
Published by:Yuvaraj V
First published: