Home /News /education /

NEET 2022 : நீட் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள்

NEET 2022 : நீட் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள்

நீட் தேர்வு

நீட் தேர்வு

அனுமதிச் சீட்டை தூசி படாமலும், சிதையாமலும் இருக்க வேண்டும். எதிர்கால தேவைகளுக்கு பயன்படும் என்பதால் அனுமதிச் சீட்டை பாதுகாத்துக்  கொள்ள வேண்டும்.   

    2022 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கான அனுமதிச் சீட்டு கடந்த 12ம் தேதி வெளியானது. தனிப்பட்ட முறையில் தபால் மூலம் தேர்வர்களுக்கு அனுப்பப்பட மாட்டாது. எனவே விண்ணப்பம் செய்த தேர்வர்கள் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

    அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியாத தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தேசிய தேர்வு முகமையின் அவசர  உதவி எண்களில் தொடர்புகொள்ளலாம். neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பலாம்.

    அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் (பெயர், புகைப்படம்) சரியானதாக என்று கவனமுடன் சரி பார்க்க வேண்டும். ஏதேனும், தவறு இருந்தால், உதவி எண்களின் மூலம் தேசிய தேர்வு முகமைக்கு தெரிவிக்க வேண்டும். இருப்பினும்,  அத்தகைய தேர்வர்கள், தாங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டின் அடிப்படையில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள்.

    அனுமதிச் சீட்டு  தற்காலிகமானது. இணைய விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட தகுதிகள் உறுதி செய்யப்படும்.

    தேர்வர்கள் அனுமதிச் சீட்டை தேர்வு கூடத்திற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும். அனுமதிச் சீட்டு இல்லாத மாணவர்கள் தேர்வெழுத கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    அனுமதிச்  சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தின் தேர்வு கூடத்தில் தான் தேர்வெழுத வேண்டும்.

    அனுமதிச் சீட்டை தூசி படாமலும், சிதையாமலும் இருக்க வேண்டும். எதிர்கால தேவைகளுக்கு பயன்படும் என்பதால் அனுமதிச் சீட்டை பாதுகாத்துக்  கொள்ள வேண்டும்.

    பதிவிறக்கம் செய்வது எப்படி?

    neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

    முகப்புப் பக்கத்தில் NEET Admit Card என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

    விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.

    நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு திரையில் தோன்றும். அதனை, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

    நுழைவுச் சீட்டினை printout எடுத்து தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தேர்வு மையங்களில் நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டும்.

    இதையும் வாசிக்கநீட் தேர்வர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் 'ஒயோ' நிறுவனம்

    நாடு முழுவதும் உள்ள 497 நகரங்களில் இருக்கும் மையங்களில் நடைபெறுகிறது.தேர்வு மையங்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புச் சீட்டு ஒரு வாரத்திற்கு முன்பே வெளியிடப்பட்டது.  விண்ணப்பதாரர்கள்  கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் டிவைஸ் உள்ளிட்டவை) தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படாது. தடை செய்யப்பட்ட இந்தப் பொருட்களை யாராவது வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது சட்ட / குற்றவியல் ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Neet, Neet Exam

    அடுத்த செய்தி