ஹோம் /நியூஸ் /கல்வி /

நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு எப்போது வெளியாகும்?

நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு எப்போது வெளியாகும்?

காட்சிப் படம்

காட்சிப் படம்

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, nta.ac.in மற்றும் neet.nta.nic.in ஆகிய இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நீட் தேர்வுக்கு இன்னும் பத்து நாட்களே மீதமிருக்கும் நிலையில், தேர்வுக்கான அட்மிட் கார்டு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஆண்டிற்கான இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜுலை 17ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் இந்த தேர்வு நடைபெறும். முன்னதாக, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. எந்தெந்த நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான விவரங்கள் மட்டும் இதில் இடம் பெற்றிருக்கும்.

விண்ணப்பதாரர்கள் (வழக்கம் - வழக்காறு/ கலாச்சாரம்/ சமயம்) சார்ந்து உணர்வோடு அணிந்து வரும் ஆடைகள்  தொடர்பான விபரத்தை தேர்வு மையத்தில் இரண்டு மணிநேரம் முன்னதாக தெரிவிக்க வேண்டும்.  இருப்பினும்,  விண்ணப்பதாரர்கLin  கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் டிவைஸ் உள்ளிட்டவை) தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படாது. தடை செய்யப்பட்ட இந்தப் பொருட்களை யாராவது வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது சட்ட / குற்றவியல் ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேர்வு நேரம் - பிற்பகல் 2 முதல் 05.20 மணி வரை. நாள்: 17.07.2022

தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் வர வேண்டும். வளாகத்திற்குள் பிற்பகல் 1.30 மணிக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நீட் தேர்வு முறை: 

இயற்பியியல், வேதியியல் மற்றும் உயிரியியல் ஆகிய பாடங்களில் இருந்து மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

இந்தி, ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடக் கேள்வித்தாள் தயாரித்து நீட் (பட்டப்படிப்பு) தேர்வு நடத்தப்படுகிறது.

பாடம் கேள்விகள் மொத்த மதிப்பெண்கள் 
தாவரவியல்பகுதி 1 : 35 கேள்விகள்பகுதி 2 : 15 கேள்விகள்  (ஏதேனும் 10 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும் )பகுதி I மதிப்பெண் : 140பகுதி ii மதிப்பெண் : 40மொத்தம் : 180
விலங்கியியல்பகுதி 1 : 35 கேள்விகள்பகுதி 2 : 15 கேள்விகள்  (ஏதேனும் 10 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும் )பகுதி 1 : 140பகுதி 2:  40மொத்தம் : 180
பகுதி 1 : 35 கேள்விகள்பகுதி 2 : 15 கேள்விகள்  (ஏதேனும் 10 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும் )பகுதி 1 : 140பகுதி 2:  40மொத்தம் : 180
Zoologyபகுதி 1 : 35 கேள்விகள்பகுதி 2 : 15 கேள்விகள்  (ஏதேனும் 10 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும் )பகுதி 1 : 140பகுதி 2:  40மொத்தம் : 180
Totalமொத்த கேள்விகள் : 180மொத்த மதிப்பெண்கள் : 720

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்:

வகுப்பினர்குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்மதிப்பெண் வரம்பு
இதர வகுப்பினர்50th Percentile 701-134
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்40th Percentile133-107
பட்டியல் கண்ட சாதிகள்40th Percentile133-107
பட்டியல் கண்ட பழங்குடியினர்40th Percentile133-107

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், nta.ac.in மற்றும் neet.nta.nic.in ஆகிய இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் வாசிக்க டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011- 40759000 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

First published:

Tags: Neet Exam