Home /News /education /

நீட் - விண்ணப்பம் தொடக்கம்.. தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு!!

நீட் - விண்ணப்பம் தொடக்கம்.. தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு!!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

NEET 2022: ஆங்கிலம், தமிழ் உட்பட 13 மொழிகளில் தேர்வு நடக்கும் நிலையில் மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் போதே தேர்வு எழுதுவதற்கான மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

    ஜூலை மாதம் நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் அதனை எழுத கூடுதலாக 20 நிமிடங்களை தேசிய தேர்வு முகமை ஒதுக்கியுள்ளது.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு நேற்று தொடங்கியுள்ளது.

    தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் (neet.nta.nic.in) சென்று மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். மே மாதம் 6 ஆம் தேதி இரவு 11 மணி 50 நிமிடங்கள் வரை பதிவு செய்ய முடியும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த மே 7ம் தேதி கடைசி நாளாகும்.

    நாடு முழுவதும் ஜூலை 17 ஆம் தேதி, பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நீட் தேர்வு நடைபெறும். இதில் 200 கேள்விகள் கேட்கப்படும் நிலையில், தேர்வு எழுதுவதற்கான நேரம் 200 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 3 மணி நேரம் வழங்கப்பட்டு இருந்ததை விட தற்போது 20 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது.

    10, 11, 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்ட அடிப்படையிலேயே பொதுத்தேர்வு - தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர்

    ஆங்கிலம், தமிழ் உட்பட 13 மொழிகளில் தேர்வு நடக்கும் நிலையில் மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் போதே தேர்வு எழுதுவதற்கான மொழியை தேர்வு செய்ய வேண்டும். நீட் தேர்வுகள் ஓ.எம்.ஆர். விடைத்தாள் மூலம் நடத்தப்படும்.

    17 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு முதல் வயது உச்சவரம்பு கிடையாது. நாடு முழுவதும் 543 மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் நீட் தேர்வு நடைபெறும்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Neet, Neet Exam

    அடுத்த செய்தி