நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், சமீபத்தில் நீட் தேர்வு 2022 ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவி குழப்பத்தை ஏற்படுத்தியது.
நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை நீக்கி இருக்கிறது பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ (Press Information Bureau - PIB). தேசிய தேர்வு முகமையின் (National Testing Agency) பெயரில் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இன்டர்நெட்டில் சுற்றி வரும் அறிவிப்பின் படத்தைப் ஷேர் செய்து உள்ள PIB இந்த இமேஜில் இருக்கும் தகவல் உண்மை அல்ல போலி என்றும், நீட் தேர்வை ஒத்தி வைக்க போவதாக NTA எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் மாணவர்களிடம் கூறி வதந்திக்கு முறுப்புள்ளி வைத்து உள்ளது
மேலும் திட்டமிட்டபடி NEET UG 2022 தேர்வு வரும் ஜூலை 17 அன்று நடத்தப்படும் என்றும் PIB குறிப்பிட்டு உள்ளது. நீட் தேர்வு ஒத்தி வைப்பு தொடர்பாக NTA வெளியிட்டதாக கூறப்பட்ட அறிக்கை ஒன்று ஆன்லைன் மற்றும் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவியது. சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்ட அந்த அறிக்கை19 ஜூன் 2022 தேதியிடப்பட்டதாக இருந்தது. மேலும் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் போல தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் "NEET UG 2022 தேர்வு ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேதியான ஜூலை 17, 2022-ல் நடக்காது என்றும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வானது ஜூலை 17-க்கு பதில் வரும் செப்டம்பர் 4, 2022 அன்று நடைபெறும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நீட் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வந்த மாணவர்கள் கடும் குழப்பம் அடைந்தனர்.
Also Read : 12வது முடிச்சாச்சு... வீடியோ கேமில் ஆர்வம் கொண்டவரா உங்கள் பிள்ளை- இந்தப் படிப்பைப் பற்றித் தெரிஞ்சுக்கோங்க
இந்த அறிவிப்பு சோஷியல் மீடியாக்களில் வைரலானதை தொடர்ந்து பல விண்ணப்பதாரர்கள் NTA-ஐ அணுகினர். இதற்கு பதிலளித்த தேர்வு ஆணையம், அது போன்ற எந்த அறிவிப்பும் தாங்கள் வெளியிடப்படவில்லை என்றும், அது போலியான அறிவிப்பு என்றும் குறிப்பிட்டது. இந்நிலையில் இந்த தகவலை நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பதற்காக போலி அறிவிப்பை முறியடிக்க, PIB-ன் உண்மை சரிபார்ப்பு குழு (Factcheck Team) தனது அதிகாரபூர்வ சோஷியல் மீடியாவில் ஒரு அப்டேட்டை ஷேர் செய்து உள்ளது.
PIB வெயிட்டுள்ள ட்விட்டில் போலியாக பரவி வரும் அறிக்கை மீது சிவப்பு கலரில் FAKE என்று சீல் குத்தப்பட்டு, “தேசிய தேர்வு முகமை NEET தேர்வு தேதியை மாற்றியுள்ளதாக ஒரு அறிவிப்பு வைரலாக பரவி வருகிறது. ஆனால் இந்த அறிவிப்பு போலியானது. NTA இது போன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. NEET UG 2022 தேர்வில் கலந் துகொள்ள இருக்கும் மாணவர்கள் குழப்பமடைய வேண்டாம். மேலும் நீடிக்கும் குழப்பத்தை தவிர்க்க இதை பார்ப்பவர்கள் சக நண்பர்களுக்கு ஷேர் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டு உள்ளது. பல மருத்துவ ஆர்வலர்கள் NEET UG 2022 தேர்வை ஒத்திவைக்கக் கோரியும், அதற்குத் தயாராவதற்கு கூடுதல் அவகாசம் கோரியும் ஆன்லைன் பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நீட் தேர்வு ஒத்தி வைப்பு தொடர்பான போலி அறிக்கை வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.