மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு...

மாதிரிப் படம்

இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில், நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்வு நடத்தப்பட உள்ளது.

 • Share this:
  நடப்பாண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு, ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 13 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில், நடப்பாண்டிற்கான நீட் தேர்வு வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி, நேரடி எழுத்துத் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில், நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்வு நடத்தப்பட உள்ளது.

  மேலும் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறத் தொடங்கியதும், தேர்வுக்கான பாடத்திட்டம், வயது உள்ளிட்ட தகுதிகள், இட ஒதுக்கீடு, தேர்வு கட்டணம், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க... நீட் தேர்வு ஆண்டுக்கு இருமுறையா, ஒருமுறையா? : தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பு

  இந்த நீட் தேர்வு 2021-ஆனது தேசிய தேர்வு நிறுவனத்தின் மூலம் தகுந்த விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்கு முறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது என்று கூறப்பட்டு உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: